மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார் இயக்குனர் பாலாஸ அதிர்ந்து போன திரையுலகம்ஸ
08 Mar,2022
தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை கொண்டுள்ளவர், இயக்குனர் பாலா.
இவர் கடந்த 2004ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிராதானா எனும் மகள் உள்ளார்.
பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும், கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்து வாழந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று பாலா – முத்துமலர் இருவரும் சுமுகமாக விவாகரத்து பெற்று முழுமையாக பிரித்துவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
சேது திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியவர் இயக்குனர் பாலா. அதன் பின் நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் மூலம் அவர் வேறு மாதிரியான இயக்குனர் என காண்பித்தார். ஆர்யாவை வைத்து அவர் இயக்கிய நான் கடவுள் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்றார்.
விக்ரம், சூர்யா ஆகிய இருவரையும் வித்தியாசமான வேடங்கள் மூலம் முழு நடிகராக மாற்றிய பெருமை பாலாவுக்கு மட்டுமே உண்டு. இவர், முத்துமலர் என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
17 வருட திருமண வாழ்க்கை
17 வருடங்கள் வாழ்ந்து வாழ்ந்து வந்த பாலா – முத்துமலர், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள்.
இவருடைய விவாகரத்து தகவல் திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.