வேலை விஷயமாக ஹைதராபாத் சென்ற இடத்தில் தனுஷ், ஐஸ்வர்யா இடையே நடந்தது குறித்து
ஹைதராபாத்துக்கு சென்ற தனுஷும், ஐஸ்வர்யாவும் ஜனவரி 16ம் தேதி இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு மது அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்று இரவே பிரபலம் ஒருவர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்ய தனுஷும், ஐஸ்வர்யாவும் சண்டை போடத் துவங்கினார்களாம்.
அதன் பிறகு அவர்கள் தங்கள் அறைகளுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு ஐஸ்வர்யா தனுஷுக்கு போன் போட வாக்குவாதம் தொடர்ந்திருக்கிறது. அப்பொழுதே இனி பிரிவது என்று முடிவு செய்தார்களாம்.
மறுநாள் தனுஷ் ஐஸ்வர்யாவிடம் நேற்று இரவு பேசியது எல்லாம் உண்மை தானே என்று கேட்டாராம். அதற்கு ஐஸ்வர்யாவோ, ஆமாம், இனியும் உங்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்று தெரிவித்தாராம்.
அதன் பிறகே தனுஷ் பிரிவு குறித்து ட்வீட் செய்ய, ஐஸ்வர்யாவும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டாராம். தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.
ஐஸ்வர்யாவை பிரிந்த கையோடு மறுபடியும் அதையே செய்யும் தனுஷ்: இது நல்லதுக்கில்லயே
நீ தனுஷுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஐஸ்வர்யாவுக்கு உத்தரவு போட்டுள்ளாராம் ரஜினி. இதற்கிடையே தன் கவனத்தை திசை திருப்ப அடுத்தடுத்து புதுப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் தனுஷ்.
பாலிவுட்டில் இரண்டு படங்களில் நடிக்கவிருக்கிறார். அதில் ஒன்று மெகா பட்ஜெட் படமாகும்.
ஐஸ்வர்யா இப்படிப்பட்டவர் தான்: தனுஷ் ஓபன் டாக்
காதல் கொண்டேன் திரைப்படத்தை பார்த்து அதில் இம்ப்ரெஸ் ஆகி தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்தார் ஐஸ்வர்யா. அதுதான் இவர்கள் காதலுக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது. அதன் பின் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலிக்க துவங்கினர். 2004 ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உண்டு.
18 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் விவாகரத்து பெறப்போவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தனர். மிகவும் அன்யோன்யமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் திடீரென பிரிந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.இந்நிலையில் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவிக்க சமூகத்தளங்களில் முழுவதுமே இவர்களை பற்றிய பேச்சுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.
பல பழைய வீடியோக்களை ரசிகர்கள் பதிவிட்டு இவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாவை பற்றி பேசிய விஷயம் தற்போது வைரலாகிவருகிறது. தனுஷிடம் உங்க மனைவி ஐஸ்வர்யாவின் குணாதிசயம் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, அவர் மிகவும் சாந்தமானவர்,என்னை விட அவருக்கு பொறுமை அதிகம் என்றார் தனுஷ்.