இது தொடர்பாக இதுவரும் அவரவர் சமூக ஊடக பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை கையெழுத்து போடும் பகுதியில் பெயரையும் அதற்கு முன்பாக சில வார்த்தைகளை மட்டும் மாற்றிக் கொண்டு வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், "நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருத்தோம். எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம்.
இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.. தனுஷும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவுசெய்துள்ளோம்.
தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும் என்று இருவரும் கூறியுள்ளனர்.
இதன் கீழே தனுஷ், ஓம் நமசிவாய, அன்பை பரப்பவும் என்றும் ஐஸ்வர்யா, "உங்கள் மீது எப்போதும் மிகுந்த அன்பு" என்று குறிப்பிட்டு புன்னகைக்கும் எமோஜியுடன் "கடவுளின் வேகம்" என்று தெரிவித்துள்ளார்.
வயதில் சிறிய தனுஷை காதல் திருமணம் முடித்த ஐஸ்வர்யா
தனுஷ் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த 2000களில் அவருக்கு பக்கபலமாக அவரது இருந்தவர் ஐஸ்வர்யா.
இருவரும் தமிழ் திரையுலகின் பிரபல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ். ஐஸ்வர்யா தமிழ் முன்னணி நட்சத்திரம் ரஜினிகாந்தின் மகள்.
இந்த இருவருக்குமே நடந்த திருமணம், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. ஆனால், அதற்கு முன்பாக வெறும் ஆறு மாதங்கள் காதலித்த பிறகு அந்த திருமணம் நடந்தது.
அதுவும் தனுஷ் தனது 23 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்கள் வாழ்க்கையை ஒன்றாகக் கழிக்க முடிவு செய்தபோது, அவர்களின் வயது வித்தியாசம் காரணமாக அவர்களின் ஜோடி பொருந்தவில்லை என்று சமூகத்தில் ஒரு பிரிவினர் உணர்ந்தனர். தனுஷை விட ஐஸ்வர்யா இரண்டு வயது மூத்தவர், ஆனால் அது இருவருக்கும் இடையில் எப்போதும் குறிகேகே வந்ததில்லை என இருவரும் தெரிவித்தனர்.
இந்த இருவரும் எப்படி காதலித்தனர் என்பதை அறிய வேண்டுமா? அது...
தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படம் வெளியான தருணம். அப்போதுதான் இருவரும் முதலில் சந்தித்தனர். திரையரங்க உரிமையாளர் ஒருவர் ஐஸ்வர்யாவை தனுஷிடம் அறிமுகப்படுத்தியபோது, அவரது நடிப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் ஐஸ்வர்யா.
அடுத்த நாளே, ஐஸ்வர்யாவிடமிருந்து ஒரு வாழ்த்துக் குறிப்புடன் ஒரு பூங்கொத்தை பெற்றார் தனுஷ். ஐஸ்வவர்யாவின் இயல்பான குணத்தை நடிகர் தனுஷ் பாராட்டினார். ஆனால் அந்த நேரத்தில் இருவருக்கும் இடையில் அதற்கு மேல் எதுவும் இல்லை.
இந்த காலக்கட்டத்தில்தான் தனுஷும் ஐஸ்வர்யாவும் அடிக்கடி ஒருவரையொருவர் பார்க்கிறார்கள் என்று ஊடக செய்திகள் தலைப்புச் செய்திகளாயின. சினிமா சிசுக்களும் வெளிவந்தன. அந்த நேரத்தில், தனுஷ் தனது சகோதரியின் தோழி தான் என்றும், வேறு ஒன்றும் இல்லை என்றும் கூறியதை மறுத்து பேட்டியும் கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் இந்த ஜோடி சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள் என்று இருவரது குடும்பத்தினர் நினைத்தனர்.
இதைத்தொடர்ந்து விரைவில், இரு வீட்டாரும் கூடி திருமண நிச்சயதார்த்தம் மற்றும் ஏற்பாடுகளைச் செய்தனர். ஒரு சினிமா இதழுக்கு அளித்த நேர்காணலில், ஐஸ்வர்யாவின் உறவைப் பற்றிய சிறந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் தனுஷ்.
"எங்கள் உறவின் சிறந்த விஷயம் என்னவென்றால், நாங்கள் ஒருவருக்கொருவர் மற்றவருக்கான இடத்தை அதிகமாக கொடுப்பதுதான். நாங்கள் இருவரும் மற்றவருக்காக மாறுவதை நம்புவதில்லை. நாங்கள் ஒன்றாக இருக்க விரும்புகிறோம். நீங்கள் 20-களின் நடுப்பகுதியில் இருக்கும்போது, நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதில் உங்கள் மனம் அமைகிறது, உங்களை மாற்றுவது மிகவும் கடினம்," என்று கூறியிருந்தார்.
இந்த ஜோடியின் திருமணம் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட், ஹாலிவுட் என நடிகர் தனுஷ் பயணப்பட, தமிழ் சினிமா தயாரிப்பு, த்ரீ டி பட இயக்கம், திரைக்கதை இயக்கம் என தனி பாதையில் பரிணமிக்கிறார் ஐஸ்வர்யா. இந்த இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளன