பண்டைய நாகரிகத்தை பறைசாற்றும் இடத்தில் பாலியல் குறும்படம்
08 Jan,2022
-
அக்ரோபோலிசில் படமாக்கப்பட்ட இந்த குறும்படம் வெட்கக்கேடானது என கிரேக்க நடிகர் சங்கத்தின் தலைவர் ஸ்பைரோஸ் பிபிலாஸ் குறிப்பிட்டுள்ளார்.
கிரீஸ் நாட்டின் ஏதென்சில் உள்ள பண்டைய தொல்பொருள் தளமான அக்ரோபோலிசை அவமதிக்கும் வகையில், குறும்படம் எடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்ரோபோலிசில் இரண்டு ஆண்கள் உடலுறவு கொள்வது போன்று அந்த படத்தில் வருகிறது. மொத்தம் 36 நிமிடங்கள் ஓடும் அந்த குறும்படத்திற்கு ‘டிபார்த்தினான்‘ என பெயரிட்டுள்ளனர். டிசம்பர் 21ம் தேதி ஆன்லைனில் படத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த வாரம்தான் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது.
இதையடுத்து நாட்டின் கலாச்சார அமைச்சகம் விசாரணையை தொடங்கி உள்ளது. அக்ரோபோலிசில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை, அக்ரோபோலிசின் தொல்பொருள் தளமானது, சமூக செயல்பாடு மற்றும் நினைவுச்சின்னத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் எந்தவித செயல்பாடுகளுக்கும் ஏற்ற இடம் அல்ல எனறு கலாச்சாரத்துறை கூறி உள்ளது.
அந்த குறும்படத்தில் பல ஆண் மற்றும் பெண்கள் மிகவும் ஆபாசமாக நடித்துள்ளனர். அக்ரோபோலிசில் உள்ள காட்சியில் நடிகர்கள் சிலர் சுற்றி நிற்க, இரண்டு ஆண்கள் உடலுறவு கொள்கிறார்கள். அவர்களின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை பார்வையாளர்கள் கடந்து செல்வதையும் காணமுடிகிறது. ஆனால், இதை கலைப்படைப்பு என்றும், அரசியல் நடவடிக்கை என்றும் கூறுகிறார் படத்தின் தயாரிப்பாளர்.
இந்த திரைப்படம் வெட்கக்கேடானது என கிரேக்க நடிகர் சங்கத்தின் தலைவர் ஸ்பைரோஸ் பிபிலாஸ் குறிப்பிட்டுள்ளார். சமூக செயல்பாடு என்ற பெயரில் எல்லாவற்றையும் செய்ய முடியாது. உண்மையில், இது ஒரு செயல்பாடாக நான் கருதவில்லை, இதற்காக ஒரு கிரேக்கனாக, நான் வெட்கப்படுகிறேன், என்று ஸ்பைரோஸ் பிபிலாஸ் கூறி உள்ளார்.
கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் உள்ள அக்ரோபோலிஸ், உலகின் மிகவும் பிரபலமான பண்டைய தொல்பொருள் தளங்களில் ஒன்று. உயர் பாறை அடுக்கின் மேல் உள்ள இந்த பண்டைய அரண், வரலாற்றில் குறிப்பிடத்தக்க, பெரும் கட்டிடக்கலையின் பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை எச்சங்களையும், குறிப்பாக பிரபலமான பார்த்தினன் கட்டிடத்தையும் கொண்டுள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக உள்ளது குறிப்பிடத்தக்கது