பட வாய்ப்புக்காக படுக்கை: அர்ஜுன் பட நடிகை பகீர் தகவல்
15 Dec,2021
தென்னிந்திய திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டது அதிகம் நடந்ததாக சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுர்வீன் சாவ்லா சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர். அர்ஜுன், சேரன், விமல் நடித்த மூன்று பேர் மூன்று காதல் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2 படத்தில் நடித்தார்.
அவர் தமிழ் தவிர்த்து கன்னடம், தெலுங்கு, இந்தி, பஞ்சாபி மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது வெப்தொடர்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் சுர்வீன் கூறியதாவது,
பட வாய்ப்புக்காக மும்பைக்கு வந்தபோது என் உடல் எடையை வைத்து அசிங்கப்படுத்தினார்கள். 56 கிலோ இருப்பவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்றார்கள்.
எடுத்த எடுப்பிலேயே உன் வெயிட் என்ன, இடை அளவு என்ன, மார்பளவு என்ன என்று கேட்டார்கள். அதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
படங்களில் நடிக்க இதெல்லாமா கேட்பார்கள் என்று வியந்தேன். தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க படுக்கைக்கு அழைக்கப்பட்டது அதிகம் நடந்தது. அதெல்லாம் கடினமான காலகட்டம் என்றார்.
Paramesha Panwala கன்னட படம் மூலம் தான் பெரிய திரைக்கு வந்தார் சுர்வீன். இந்நிலையில் அவர் தென்னிந்திய திரையுலம் பற்றி கூறியிருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.