என் ஆடைக்குள் கையை விட்டார்: பிரபல நடிகை திடுக் தகவல்
15 Dec,2021
ஆடிஷனின்போது பெரிய நடிகர் ஒருவர் தன் ஆடைக்குள் கையை விட்டதாக ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை நவோமி ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
3 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஈவ் மணிபென்னியாக நடித்தவர் நவோமி ஹாரிஸ். அவர் தனக்கு நடந்த பாலியல் கொடுமை பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அந்த பேட்டியில் நவோமி கூறியதாவது,
ஒரு படத்திற்கான ஆடிஷனில் கலந்து கொண்டேன். அப்பொழுது அங்கிருந்த பெரிய நடிகர் ஒருவர் என் பாவாடைக்குள் கையை விட்டு தடவினார். இதை பார்த்து காஸ்டிங் டைரக்டரோ, படத்தின் இயக்குநரோ எதுவும் சொல்லாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தது தான் அதிர்ச்சி அளித்தது.
சினிமா துறையில் நடக்கும் பாலியல் கொடுமைகளை பார்க்கும்போது எனக்கு ஒரேயொரு முறை தான் நடந்திருக்கிறது என்பது நிம்மதியே.
அந்த ஒரு முறை தான் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது என்றார்.
தங்களுக்கு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், காஸ்டிங் டைரக்டர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்வேறு நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் நவோமியும் மீ டூ(Me Too)என்று கூறியிருக்கிறார்.