பாக்யராஜை அடித்து விரட்டிய பாரதிராஜா..
07 Dec,2021
பாரதிராஜா கோபக்காரர் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனா அதுக்காக அடித்து விரட்டும் அளவுக்கு இம்புட்டு பெரிய கோபக்காரர் என்று இதுவரைக்கும் தெரியாம போச்சே என்கிறது கோலிவுட் வட்டாரம். அப்படி என்னப்பா சம்பவம் நடந்துச்சு, பாக்கலாம் வாங்க.
இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவரது பட வெற்றியே இவரது பெயரை இன்னும் பல காலத்துக்கு பேசும். அந்த அளவுக்கு தன்னுடைய படங்களால் இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த தீர்க்கதரிசி. சினிமாவை வேறு ஒரு கோணத்தில் ரசிகர்களிடம் கொண்டு சென்றவர்.
அன்றைய காலத்தில் பாரதிராஜா மிகப் பெரிய இயக்குனர் என்பதால் அவரிடம் உதவி இயக்குனராக சேர்வதற்கு கூட்டம் அலைமோதும். அப்படி கூட்டத்தில் ஒருவராக நுழைந்து அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தவர்தான் பாக்கியராஜ்.
சினிமாவில் பாரதிராஜா எப்படியோ அதேபோல் பாக்கியராஜ் சினிமாவில் இருந்த காலகட்டங்களில் அவரது படங்கள் அனைத்தும் இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தது. இவருக்கு திரைக்கதை மன்னன் என்ற பட்டப் பெயரும் உள்ளது. சரிப்பா அறிமுகம் போதும் விஷயத்துக்கு வா என்கிறீர்களா.
இதோ வந்துட்டோம், பாரதிராஜா படம் இயக்கிக் கொண்டிருக்கும் போதே ஒரு தயாரிப்பு கம்பெனியை தொடங்க இருந்தாராம். அதற்காக ஒரு படத்தின் கதை டிஸ்கஷனில் இருந்தபோது பாக்கியராஜுக்கும், பாரதிராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அப்போது பாரதிராஜாவை, பாக்கியராஜ் வாய்க்கு வந்தபடி பேச கடுப்பான பாரதிராஜா ஒழுங்கா இங்கிருந்து ஓடிப்போயிரு என விரட்டி விட்டுவிட்டாராம்.
எதேர்ச்சியாக வந்த நடிகரும் இயக்குனருமான மனோபாலா பாரதிராஜாவிடம், பாக்கியராஜ் எங்கே என கேட்க அவர் நடந்ததைச் சொல்ல, எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டீங்க, புத்திசாலியை கூட வைத்துக் கொள்வது தானே புத்திசாலித்தனம், எனக் கூறி பாக்யராஜிடம் சென்று சமாதானப்படுத்தி அவரை அழைத்து வந்தாராம். இந்த தகவலை மனோபாலா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.