தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் யுவன்ஷங்கர்ராஜா. இளமையான இசையால் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர் யுவன். இளையராஜாவின் வாரிசு என்பதால் இவர் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அரவிந்தன் படம் மூலம் அறிமுகமான யுவன் சங்கர் ராஜா தற்போது 150க்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், வெங்கட்பிரபு, லிங்குசாமி, விஷ்ணுவர்தன், சீனுராமசாமி, ராம், தியாகராஜன் குமாரராஜா ஆகியோரின் படங்களில் இசை அமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தன்னுடைய தனித்துவமான குரலால் பாடகராகவும் தனி முத்திரையைப் பதித்துள்ளார்.
தல அஜித்தை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய படம் தீனா. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். யுவன் இப்படத்தில் இசையமைத்த வத்திக்குச்சி பத்திக்காத்தடி என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அஜித், யுவன் இருவருக்கும் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொள்ள தீனா படம் உதவியது.
கேபி ஜகன் இயக்கத்தில் 2003 இல் வெளியான திரைப்படம் புதிய கீதை. நடிகர் விஜய் நடித்த இப்படத்தில் ஆறு பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு பின்னணி இசை யுவன் தம்பி கார்த்திக் ராஜா செய்திருந்தார். சூர்யா, ஆர்யா, தனுஷ், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிம்பு என பல நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.
பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றிய யுவன் சங்கர் ராஜா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து பணியாற்ற இதுவரை வாய்ப்பு கிடைத்ததில்லை. கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை செல்வராகவன் இயக்குவதாகவும், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாகவும் இருந்தது. சில காரணங்களால் அப்படத்தை கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்து இருந்தார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் அண்ணாத்த. இப்படத்திற்கு முதலில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருந்தார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். பல காரணங்களால் ரஜினி, கமல் படங்களில் யுவன் இசையமைப்பது தட்டி போகிறது. விரைவில் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகனுக்கு யுவன் இசையமைப்பார் என யுவன் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சினிமாவை பொருத்தவரை பிரபல நடிகராக இருந்தாலும் அவர்களது படங்களுக்கு யார் இசையமைக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள். இது வரைக்கும் இவன் பல நடிகர்களை திட்டினாலும் இவர்கள் இருவருக்கும் இசை அமைக்காமல் இருப்பது ஏதாவது ஒரு சில காரணங்கள் இருக்குமென சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்