சமூக வலைத்தளங்களுக்கு போட்டியாக புதிய செயலி: ரஜினிகாந்த் அதிரடி!
24 Oct,2021
.
பேஸ்புக், வாட்ஸாப் ஊள்ளிட்ட செயலிகளுக்கு போட்டியாக இந்தியாவில் புதிய செயலி வரவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ரஜினிகாந்த் மகள் அதனை தொடங்கியிருப்பதும் பெரும் வரவேற்பை பெறும் எதிர்பார்க்கபடுகிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் ரஜினி மீண்டும் பரபரப்பு செய்தியாகியிருக்கிறார். திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை மத்திய அரசு நடிகர் ரஜினிகாந்துக்கு சமீபத்தில் அறிவித்தது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது தனுசுக்கும், துணை நடிகர் விருது விஜய் சேதுபதிக்கும் வழங்கப்படவுள்ளது.
விருதை வாங்க டெல்லி புறப்பட்டு சென்றுள்ள ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாளைய தினம் வாழ்நாளில் மிக முக்கியமான இரண்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதில் முதலாவதாக மத்திய அரசு வழங்கும் தாதா சாஹேப் பால்கே விருதை குறிப்பிட்டிருக்கிறார்.
இரண்டாவதாக ரஜினி குறிப்பிட்டிருக்கும் விடயம், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் முக்கிய செய்தியாக மாறியிருக்கிறது. உலகம் முழுவதும் பிரபலாமாக இருக்கும் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு மாற்று ஏற்பாடாக புதிய செயலிகள் வராதா என்று ஏங்கும் நாடுகளுக்கு இது புதிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
வரும் காலங்களில் சமூக வலைதளங்கள் குரல் பதிவியே பெரும்பாலும் சார்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக கிளப்ஹவுஸ் செயலி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவை அனைத்திற்கும் போட்டியாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா விசாகன், அவரது சொந்த முயற்சியில் Hoote App என்ற செயலியை உருவாக்கியிருக்கிறார். இதில் மக்கள் தாங்கள் விரும்புவதை குரல் பதிவாக பகிர்ந்துகொள்ள முடியும். அனைத்து மொழிகளிலும் இதில் பதிவிட முடியும். இந்த செயலியை நாளைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமது குரலில் பதிவிட்டு தொடங்கி வைக்க இருக்கிறார். ரஜினிகாந்த் தொடங்கிவைப்பதால் உலகம் முழுவதும் ஹாட்டி செயலில் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.