"ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான படங்களில் நடிக்க மாட்டேன்" - லொஸ்லியா!
19 Sep,2021
நடிகை சமந்தா வாழ்க்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய ஃபேமிலி மேன் குறித்து லொஸ்லியா பேசிய விடயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் ஹர்பஜன்சிங், அர்ஜுன் ஆகியோருடன் லொஸ்லியா இணைந்து நடித்த பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி லொஸ்லியாவிற்கு நடிகர் ஆரியுடன் அடுத்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் லொஸ்லியாவிடம், ‘ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து படமாக்கப்படும் ஃபேமிலி மேன் போன்ற திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த லொஸ்லியா ‘இலங்கையில் என்ன நடந்தது என்பது எனக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும். ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து எடுக்கப்படும் எந்த ஒரு திரைப்படத்திலும் அதிக பணம் கொடுத்தாலும் நான் நடிக்க மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.