பொம்மாயி வீட்டில் வருமான வரித்துறையினர் கைவரிசை
17 Sep,2021
தமிழ் திரை உலகில் சந்திரமுகி, அருந்ததி, மஜ்னு, ராஜா, ஒஸ்தி போன்ற பல திரைப்படங்களில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகரான சோனு சூட் . பாலிவுட் மட்டுமன்றி இவருக்கு கோலிவுட்டிலும் ரசிகர்கள் உண்டு.
இந்த கொரோனா காலகட்டத்தில் எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பணமாகவும், பொருளாகவும் கொடுத்து உதவியவர். மேலும் வெளிநாட்டில் இருக்கும் இந்திய குடிமக்களுக்கு தனது தாய் நாடு திரும்புவதற்கு உதவிக்கரம் நீட்டியவர் பாலிவுட் நடிகர் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, இன்சூரன்ஸ் வசதிகளோடு வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்தது என ஏராளமான உதவிகளை செய்துள்ளார். இதுபோல் உதவி செய்ததால் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமின்றி, இவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமானது.
இதுமட்டுமின்றி, இவர் கொரோனா இரண்டாம் அலையின் போது ஆக்சிஜன் சிலிண்டர், மருந்து மாத்திரைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தார். தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு, இவர் ஒரு உத்வேகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இவருக்கு மட்டுமின்றி, அவரது உறவினர்களும் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது சொத்துக்களை அடமானம் வைத்து மக்களுக்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி உதவி செய்து வருவது மட்டுமல்லாமல், தன்னைத் தேடிவந்த எம்.பி பதவியை வேண்டாம் என மறுத்த சோனு சூட் வீட்டில் ஐடி ரைட் நடந்துள்ளது குறித்து ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்து வருமானத் துறை அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.