ஆக்டிவாவில் வந்த நபரிடம் மெஷின் கன்.. அதிர்ந்து போன போலீசார்!
08 Aug,2021
சென்னை: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் பகுதியில், நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருநபரிடம் இருந்து இரண்டு மெஷின் கன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்த துப்பாக்கியை ஆய்வு செய்ததில் அவை டம்மி துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது. இதை காரைக்குடியில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் "எதற்கும் துணிந்தவன்" என்ற படத்திற்காக கொண்டு செல்வதும் தெரியவந்துள்ளது.
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 100 அடி சாலையில் SAF கேம்ஸ் வில்லேஜ் அருகில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
டாக்டர் கணவனால் பலாத்காரம் செய்யப்பட்ட மனைவி.. விவாகரத்து வழங்கி நீதியை நிலைநாட்டிய கேரள ஹைகோர்ட்டாக்டர் கணவனால் பலாத்காரம் செய்யப்பட்ட மனைவி.. விவாகரத்து வழங்கி நீதியை நிலைநாட்டிய கேரள ஹைகோர்ட்
போலீசார் அதிர்ச்சி
அப்போது அந்த வழியாக ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்த விக்டர் என்ற நபரை சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த அட்டைப் பெட்டியின் உள்ளே ஒரு பெரிய டிராவல் பேக்கில் INSAS டைப் வகையிலான இரண்டு மிசின்கன்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
போலி துப்பாக்கி
இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு காவல் ஆய்வாள சந்திரசேகர் தலைமையிலான போலீசார், பிடிப்பட்ட விக்டர் (வயது 27) என்பவரிடம் விசாரித்தனர். அவர் சென்னை பெரம்பூர் கஸ்தூரி பாய் காலனி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் வைத்திருந்து டம்மி மிசின்கன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
உதவியாளர்
மேலும் விக்டரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல திரைப்பட இயக்குனர் பாண்டிராஜின் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. டம்மி துப்பாக்கிகளை திரைப்பட படப்பிடிப்புக்காக கொண்டு செல்லப்படவிருந்ததாகவும் விக்டர் கூறியுள்ளார்.
கோயம்பேடு பஸ்
தற்போது காரைக்குடியில் பாண்டிராஜ் இயக்கும் "எதற்கும் துணிந்தவன்" (சூர்யா நடித்து வருகிறார்) என்ற படத்திற்காக இந்த இரண்டு டம்மி மிசின்கன்களை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து பேருந்தில் காரைக்குடிக்கு அனுப்பி வைக்க வந்ததாக விக்டர் போலீசில் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.