அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என தேமுதிக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆவடி, வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், செய்யூர், மதுராந்தகம், கே.வி. குப்பம், ஊத்தங்கரை, வேப்பனஹள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், செங்கம், கலசப்பாக்கம், ஆரணி, மயிலம், திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, ஏற்காடு, மேட்டூர், சேலம் மேற்கு, நாமக்கல், குமாரபாளையம், பெருந்துறை, பவானிசாகர், கூடலூர்,அவிநாசி, திருப்பூர் வடக்கு, வால்பாறை, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, திருவெறும்பூர், முசிறி, பெரம்பலூர், திட்டக்குடி, விருதாச்சலம், பண்ருட்டி, கடலூர், கீழ்வேளூர், பேராவூரணி, புதுக்கோட்டை, சோழவந்தான், மதுரை மேற்கு, அருப்புக் கோட்டை, பரமக்குடி, தூத்துக்குடி, ஒட்டபிடாரம், ஆலங்குளம், இராதாபுரம், குளச்சல் மற்றும் விளவன்கோடு ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம்
முன்னதாக அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
குஷ்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை டெல்லியில் இன்று பாஜக வெளியிட்டது.
ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு, அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை, கோவை தெற்கில் வானதி ஸ்ரீனிவாசன், காரைக்குடி தொகுதியில் ஹெச். ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக – அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்துக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவின் கோட்டையாக கருதப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
முன்னதாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நிறுத்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பாக மருத்துவர் எழிலன் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு பாஜக சார்பாக வானதி சீனிவாசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பாக அந்த தொகுதியில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.
தளி தொகுதியில் பாஜக – சிபிஐ நேரடி போட்டி
திமுக கூட்டணியில் ஆறு தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தளி தொகுதியில் நேரடியாக பாஜகவை எதிர்த்து போட்டியிடுகிறது. பாஜகவை எதிர்த்து தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ராமசந்திரன் போட்டியிடுகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வால்பாறை தொகுதியில் ஆறுமுகம், திருத்துறைப்பூண்டியில் மாரிமுத்து, திருப்பூர் வடக்கு தொகுதியில் ரவி, சிவகங்கை தொகுதியில் குணசேகரன் மற்றும் பவானிசாகர் தொகுதியில் சுந்தரம் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.