கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு ; குற்றவாளிகள் 9 பேருக்கு மரண தண்டனை 4 பேருக்கு ஆயுள்
06 Mar,2021
கடந்த 2016ம் ஆண்டு பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்தனர். இது தொடரபாக போலீசார் 4 பெண்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோபால்கஞ்ச் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடிபெற்று வந்தது.
இஅத வழக்கில் நீதிபதி லவகுச குமார் தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி லவகுச குமார் தீர்ப்பளித்துள்ளார். ஒருவர் காலமாகி விட்டார்.
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளதாக குற்றவாளிகள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்கூட திமுகவின் பெரியண்ணன் மனப்பான்மையால் மிகுந்த அதிருப்திக்கு உள்ளாகி இருக்கின்றன. திமுகவிடம் பேச்சு வாா்த்தை நடத்தியபோது இதுவரை எல்லா சட்டப்பேரவைத் தோ்தலிலும் 12 தொகுதிகளுக்குக் குறையாமல்தான் நின்றுள்ளோம். இந்த முறை 12 தொகுதிகளுக்கு மேல் தர வேண்டும் என்று இரு கட்சிகளும் கூறியுள்ளன. திமுகவோ 5 தொகுதிகளுக்கு மேல் தர மறுத்து வருகிறது.