சிம்புவிற்கு ஒரு இரசிகையின் மடல்!
28 Oct,2020
சிம்பு நடித்துவரும் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. அத்துடன் சிம்புவின் தோற்றமும் இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளிவில் வைரலாகியது.
இந்நிலையில் சிம்புவின் வெறித்தனமான இரசிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் நெகழ்ச்சியுடன் கூடிய ஒரு கடிதத்தை பதிவு செய்துள்ளார்.
குறித்த கடிதத்தில், “ எனக்கு கடந்த 3 நாட்களாக தொண்டை வலி, தலைவலி மற்றும் காய்ச்சல் உள்ளது. என்னால் எதையும் பதிவு செய்ய முடியவில்லை. வாழ்க்கை நிலையில்லாதது என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு அடுத்து என்ன நடக்கும் என தெரியாது. எல்லாம் கடவுளின் கையில் உள்ளது.
மேலும் இந்த குறுஞ்செய்தி சிம்பு சாருக்காக என்று கூறி அவர் கூறியதில் “நீங்கள் மீண்டும் சமூக வலைதள பக்கம் வந்ததற்கு நன்றி. உங்கள் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அதை பார்த்து எனக்கு பேச்சே வரவில்லை.
என் வாழ்க்கையில் நீங்கள் மட்டும் தான் உத்வேகம் தருகீறீர்கள். உங்களின் வசனங்கள், பாடல்கள், படங்கள் மூலம் எனக்கு நம்பிக்கை, அன்பு, உற்சாகம் கிடைக்கின்றது. அதற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் தற்போது வைரலாகி வருவதுடன், சிம்பு உட்பட அவர்களது இரசிகர்களையும் கலங்கவைத்துள்ளது.