தளபதி விஜய்யும் அவரின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகருக்குமிடையில் மோதல்; தகவல்!
24 Oct,2020
தென்னிந்திய நடிகர் தளபதி விஜய்-யும் அவரின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரும் கடந்த ஜந்து வருடங்களாக பேசிக்கொள்வதில்லையென்ற தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
விஜய்யும் – சந்திரசேகரும் சுமார் ஜந்து வருடங்களாக பேசிக்கொள்வதில்லையெனவும், பொது நிகழ்வில் கலந்துகொள்ளும்போது மரியாதையை நிமித்திமாக இருவரும் அன்பை பரிமாறிக்கொள்வார்களே தவிர வீட்டில் இருவரும் பேசிக்கொள்வதில்லையென தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த காலங்களில் விஜய்யின் அரசியல் பயணம் தொடர்பிலும், திரைப்படங்கள் தொடர்பிலும் விஜயின் அனுமதியின்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை சந்திரசேகர் தெரிவித்து வந்ததாகவும், இதனை விஜய் கண்டித்தும் சந்திரசேகர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லையென்ற காரணத்தினால் தனது தந்தையுடன் விஜய் கதைப்பதை நிறுத்திக்கொண்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்கள்.