சிங்களத்தி ராதிகா உடனே வக்காளத்து: முரளீதரனாக நடிக்க கூடாதா விஜய் சேதுபதி ?
17 Oct,2020
முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தற்போது அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கு உலக தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்.
சிங்கள நடிகையான ராதிகா, தற்போது வக்காளத்து வாங்க ஆரம்பித்துள்ளார். முதலில் ராதிகா தமிழ் பெண் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது முற்றாக தவறு. அவர் சிங்களவர் என்பது பலர் அறியாத உண்மை.
விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசியல்வாதிகள், திரையுலகினர் உள்ளிட்டோர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர். அதேபோல் ட்விட்டர் பக்கத்தில் #ShameonVijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
இந்நிலையில் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டிருந்த ராதிகா சரத்குமார், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு வேறு வேலை இல்லையா” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
லண்டனில் ஒரு நிகழ்சியை ஏற்பாடு செய்யுங்கள் நான் வருகிறேன் என்று, ஒரு ஈழத் தமிழரிடம் சொல்லி. நிகழ்சியை அந்த ஈழத் தமிழர் செலவில் செய்து. தனது புத்தகத்தை அந்த நிகழ்சியில் வெளியிட்டு. நிகழ்சியை புத்தக வெளியீட்டு விழாவாக மாற்றிய டுபாக்கூர் தான் இந்த ராதிகா என்றால் பலருக்கும் தெரியும். இறுதியில் ஈழத் தமிழர் தலையில் நாமம் போட்ட ஆள். சிங்கள ரத்தம் தற்போது சுண்டி இழுக்கிறது இவரை.