ஆறரை லட்சத்தால் அசிங்கப்பட்ட ரஜினி : கோடி கோடியால் பணம் இருந்து ஏன் இப்படி இந்த மனுஷன் ?
17 Oct,2020
தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாய் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் மக்களின் மனதில் நிலையான ஆட்சியை பெற்றவர் தான் ரஜினிகாந்த். தற்போது ஒரு படத்திற்கு மட்டும் 100 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் ஆசை யாரை தான் விட்டது ? அதுக்கு இப்படி போய் ஆறரை லட்சதிற்காககாக நீதிமன்றத்தில் அசிங்கப்படுத்தபட்ட அவலம் ரஜினியின் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமாக கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு அரசாங்கம் சொத்து வரி விதித்ததற்கு நீதிமன்றத்தை ரஜினிகாந்த் நாடியது அவரை தேவையற்ற விமர்சனங்களில் சிக்க வைத்துள்ளது. இந்நிலையில் அரசியல் ஆர்வலரும் மூத்த பத்திரிகையாளருமான கணபதி ரஜினியை சரமாரியான கேள்விகளாலும், கருத்துக்களாலும் விமர்சித்துள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வரி விலக்கு தர முடியாது. நீதிமன்றத்தின் நேரத்தை இப்படி வீணடிக்க வேண்டாம் என்று நீதிபதி ரஜனியை கடுமையாக ஏச்சரித்து வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்.