நகைச்சுவை நடிகை கோவை சரளா திருமணம் செய்யாததற்கு காரணம்
09 Sep,2020
இதுதானாம்!..
காமெடி நடிகை என்றாலே மனோரமா ஆச்சி தான். அவரை அடுத்து அந்த இடத்தில் மக்களால் அங்கீகரிக்கப்பட்டது கோவை சரளா அவர்கள் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடங்கி அனைத்து முன்னணி தமிழ் நட்சத்திரங்களின் படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். 58 வயது ஆகியும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஏன் என்றால் தனது தம்பி, தங்கைகளின் குழந்தைகளை தனது குழந்தைகளாகவே பார்த்து வந்ததால் திருமணம் பற்றி யோசிக்க முடியவில்லையாம். அது மட்டும் இல்லாமல் தனது நகைச்சுவை பாணியில் என்னிடம் இருந்து ஒரு ஆண்மகன் தப்பித்து விட்டான் என்று கூறுவாராம்.
திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் இவர் மாதா மாதம் அனாதை இல்லங்களுக்கு பணம் கொடுத்து உதவி வருகிறாராம். இதுவே தனது வாழ்க்கைக்கு சந்தோஷம் என்று கூறுவாராம் நடிகை கோவை சரளா.