வாழை இலையை ஆடையாக அணிந்த நடிகை அனிகா
19 Aug,2020
நடிகை அனிகா சுரேந்ரன் வாழையிலையை ஆடையாக அணிந்த நிலையில் பிடித்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மலையாள திரைத்துறையை சேர்ந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். ‘கத துடருன்னு’ என்ற மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த அனிகா, தமிழில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடிம்ததுள்ளார் அனிகா.
தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். சில குறும்படங்களிலும் நடித்துள்ள அனிகா, பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
சிறுமியாக இருந்த அனிகா வளர்ந்து விட்டார். சமீப காலமாக முன்னணி ஹிரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் கலர் கலர் சேலையில் அவர் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்ஸ் சமூக வலைதளங்களில் வைரலானது.
அஜித்தின் மகளாக நடித்த குட்டிப் பெண்ணா இவர் என்று பிரமிக்கும் வகையில் இருந்தது அவருடைய போட்டோக்கள். அதே நேரத்தில் அனிகா, இந்த சின்னஞ்சிறு வயதில் இவ்வளவு கிளாமர் தேவையா என விமர்சனங்களும் எழுந்தன.
ஆனால் அதையெல்லாம் புறக்கணித்த, அனிகா தொடர்ந்து தனது போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். மொடர்ன், ட்ரெடிஷனல் என இன்ஸ்டாகிராமை தெறிக்கவிட்டு வருகிறார் அனிகா. அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது.
அதாவது வாழை இலையை ஆடையாக சுற்றிக்கொண்டு இருக்கிறார். அந்த வாழை இலைகள். வாழை இலைகள் நழுவி கீழே விழாதப்படி இடுப்பில் வாழை மட்டையை கட்டியுள்ளார் அனிகா.
மேலும் தலையில் ஐந்து வாழைப்பூக்களை வைத்துள்ள அனிகா கையில் வாழை மட்டையுடன், ஒரு வாழைத் தோட்டத்தை போல போஸ் கொடுத்துள்ளார்.