உலக இசை தினத்தை முன்னிட்டு கங்கை அமரனை கௌரவப்படுத்தும் தமிழ்ச்சங்கங்கள்
19 Jun,2020
அன்னக்கிளியில் இளையராஜாவுடன் 1975-ல் துவங்கிய இசைப்பயணம், பாடலாசிரியராக 2500-க்கு மேற்பட்ட பாடல்கள், இயக்குநராக 17 படங்கள், இசையமைப்பாளராக 127 படங்கள், நடிகராக 50-க்கு மேற்பட்ட படங்கள், பாடகராக 300-க்கும் மேற்பட்ட படங்கள், தயாரிப்பாளராக 4 படங்களில் பணியாற்றிய கங்கை அமரனை கெளரவிக்கும் பொருட்டு உலக இசை தினமான வரும் ஜூன் 21-ம் தேதி அன்று டோக்கியோ தமிழ்சங்கம் (Tokyo Tamil Sangam) சார்ந்த கணேசன் ஹரி நாராயணன், மலேசியாவை சேர்ந்த தமிழ் எக்ஸ்பேட்ஸ் மற்றும் உலகெங்கும் உள்ள 30-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து உலக இசை தினத்தை விமரிசையாக நேரலையில் கொண்டாடவிருக்கிறது.
கொரோனாவின் பாதிப்பினால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் மனதிற்கு சிறிதளவில் தங்களால் இயன்ற அளவிற்கு மக்களின் மனதிற்கு, இதம் தரும் அளவிற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சில் தமிழ் சினிமாவில் 45 வருடத்திற்கு மேல் பாடலாசிரியர், கதாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பல்வேறு முகம் கொண்ட கங்கை அமரன் கெளரவிக்கப்படுகிறார்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் கங்கை அமரனுடன் தமிழ் திரையுலக பிரமுகர்கள் மற்றும் தமிழ் திரையுலக முன்னணி பாடகர்கள், உலகெங்கும் உள்ள தமிழ்ச் சங்கங்களை சேர்ந்த பாடகர்கள் தங்கள் இசையுடன் நேரலையில் அவருடன் பயணிக்கிறார்கள்.
இது இசை வரலாற்றில் முதல் முறையாக நேரலையில் ஓர் இசை வேள்வி என்பது குறிப்பிடத்தக்கது. இசையின் இளவலுடன் ஓர் இன்னிசைப் பயணமாய் ஒரு மாபெரும் தவம் செய்த கலைஞனுக்கு இசையால் மகுடம் சூட்டும் வரமாய் இந்நிகழ்ச்சி வடிவமைக்கபட்டுள்ளது.