நடிகை, ரேடியோ ஜாக்கி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என, பல துறைகளில் வெளுத்து வாங்கும், தீபா வெங்கட்: சிம்ரன், ஜோதிகா, சினேகா, நயன்தாரான்னு நிறைய கதாநாயகியருக்கு, 'டப்பிங்' பேசியிருக்கேன். எல்லா நடிகையருக்குமே ரொம்பப் பிடிச்சு தான், டப்பிங் பண்ணுவேன். ஆனா, சிலர் மட்டும் தான், ரொம்ப சின்சியரா அந்த கேரக்டருக்கு நியாயம் பண்ணியிருப்பாங்க. அவங்களுக்கு, டப் பண்ணும் போது தான், எனக்கு சந்தோஷமா இருக்கும். அதே சமயம், கொஞ்சம் பதற்றமாகவும் இருக்கும்.சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா போன்றோர், அவங்களுடைய கேரக்டரை ரொம்ப உணர்ந்து நடிச்சிருப்பாங்க. அதைக் கெடுத்துடாம, டப்பிங்ல நல்லா பண்ணணும்னு நினைப்பேன்.
ஜோதிகாவும், நயன்தாராவும், டப்பிங் முடிஞ்சதுமே, எப்படி வந்திருக்கு, தப்பு எதுவும் இருக்கான்னு பார்க்கக் கூடியவங்க. அவங்க எனக்கு கால் பண்ணி, சின்ன மாற்றம் சொல்றது; நல்லா பண்ணினதை பாராட்டுறதுன்னு, வேலையில அவ்வளவு கச்சிதமா இருப்பாங்க. மயக்கம் என்ன படத்துல, நடிகை ரிச்சாவுக்கு, டப் பண்ணது ரொம்பப் பிடிக்கும். எப்படியோ என் நம்பர் தேடி, கண்டுபிடிச்சு வாங்கி, ரிச்சா கால் பண்ணி, 'ரொம்ப கஷ்டப்பட்டு
நடிச்சிருந்தேன்.
'நானே, டப் பண்ணணும்னு நினைச்சேன். அது முடியாமப் போயிருச்சு. நானே பேசியிருந்தா கூட, இவ்வளவு சிறப்பா வந்துருக்காது'னு பாராட்டினாங்க; அதை மறக்க முடியாது.சீரியல்கள் பண்ணிட்டு இருக்கும்போது, நிறைய படங்கள் பண்றதுக்கான வாய்ப்புகளும் வந்தன. ஆனா, சீரியலுக்கே தேதி சரியா இருந்ததால, படங்கள் பெருசா பண்ண முடியலை.படங்களை விட, சீரியல்கள் எனக்கு வசதியாகவும் இருந்தன. ஆனா, ஒரு கட்டத்துல சீரியல்கள் எனக்கு போர் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு. திரும்பத் திரும்ப அதே விஷயங்களைத் தான் பண்ணிட்டு இருக்காங்கன்னு தோணுச்சு. சரின்னு ஒரு, 'பிரேக்' எடுத்தேன். அந்த பிரேக் அப்படியே பழகிடுச்சு. அதுவுமில்லாம வேற வேலைகளும்
வந்துச்சு.இப்ப சீரியல்களை எடுத்துப் பார்த்தீங்கன்னாகூட, 'மேக்கப், செட்'டுன்னு பிரமாண்டமா மாறியிருக்கே தவிர, கதை எனக்கு, அதே பழைய, 'பார்மேட்'குள்ள இருக்கற மாதிரி தான் தோணுது. டப்பிங் போகும்போது, இப்பவும் நடிக்கிறதுக்கான வாய்ப்புகள் வந்துட்டு தான் இருக்கு. ஆனா, திரும்ப நடிக்க வர, ஐடியா இப்போதைக்கு இல்லை. நடிப்பை விட, டப்பிங் எனக்கு இன்னும் பிடிச்சிருக்கு.
நடிப்பை விட்டு வெளியே வந்து ரொம்ப வருஷமாச்சு. இப்பவும் நான் எங்க போனாலும், என்னை அடையாளம் தெரிஞ்சு வந்து பேசும்போது ஆச்சரியமாக இருக்கும். அந்த அன்புக்கு ரொம்ப நன்றி!