26 வயது நடிகர் திடீர் உயிரிழப்பு.. திரையுலகம் அதிர்ச்சி!
24 May,2020
புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இளம் நடிகர் உயிரிழந்தார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் தவித்து வருகின்றனர். லாக்டவுனால் பலரது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது
! திடீர் மரணங்கள் படப்பிடிப்பு இல்லை என்பதால் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவரும் நடிகர்களும் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குரியதாக இருக்கிறது. அவர்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, பாலிவுட்டில் தொடரும் நடிகர்களின் திடீர் மரணங்கள் திரையுலகினருக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. நடிகர்கள் உயிரிழப்பு பிரபல இந்தி நடிகர் இர்பான் கான், புற்றுநோய்-க்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில்
மும்பையில் திடிரென மரணமடைந்தார். அவர் மரணமடைந்த அடுத்த சில நாட்களிலேயே பிரபல நடிகர் ரிஷிகபூர் உயிரிழந்தார். இதனால் இந்தி திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்தது. இவர்களை அடுத்து மேலும் சில சினிமா, சீரியல் நடிகர்கள் உயிரிழந்தனர். புற்றுநோய் இப்போது இளம் நடிகர் மோகித் பஹேல் (Mohit Baghel) உயிரிழந்துள்ளார். இவர் சல்மான் கான், அசின் நடிப்பில் அனீஸ் பாஸ்மி இயக்கிய
ரெடி படத்தில் நடித்திருந்தார். மேலும் காலி காலி சோர் ஹே உட்பட சில படங்களில் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மோகித், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அதற்காகச் சிகிச்சை பெற்று வந்தார். இந்தி திரையுலகம் லாக்டவுன் காரணமாக தனது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் மதுரா சென்றிருந்தார். அங்கு பெற்றோர் மற்றும் தனது சகோதரனுடன் வசித்து வந்த அவர், நேற்று காலை திடீரென உயிரிழந்தார். அவருக்கு வயது 26.
இதை இந்திப் பட இயக்குனர் ராஜ் சாண்டில்யா உறுதிப்படுத்தி உள்ளார். மோகித் பஹேலின் உயிரிழப்பு இந்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பரினீதி சோப்ரா இதையடுத்து இந்தி நடிகை பரினீதி சோப்ரா, 'திறமையான நடிகர் ஒருவரை இளம் வயதில் இழந்துவிட்டோம்' என்று தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, ட்விட்டரில் கூறியுள்ள இரங்கலில், இந்த செய்தியை கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒன்றாக பணியாற்றி உள்ளோம். திறமையான, துடிப்பான இளம் நடிகர் அவர்' என்று தெரிவித்துள்ளார். மேலும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.