மரத்தில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார் நடிகை வாணிஸ்ரீயின் மகன்.
23 May,2020
. இவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். 60களின் இறுதிகளிலும், 70-களிலும் தமிழக மக்களை நடிப்பால் அசத்தியவர் வாணிஸ்ரீ..
எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்.. பல நடிகைகள் அந்த காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தாலும், வாணிஸ்ரீயின் டெடிகேஷன்தான் அவரை சமகாலத்து நடிகைகளையும் பின்னுக்கு தள்ளியது. டாக்டர் கருணாகரன் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார் வாணிஸ்ரீ.. இது ஒரு காதல் திருமணம்.. ஒரு மகன், ஒரு மகள் என இவர்களுக்கு 2 பிள்ளைகள்..
2 பேருமே டாக்டர்கள்தான்.. மகன் பெயர் அபினய வெங்கடேஷ கார்த்திக்.. வயது 36 ஆகிறது.. அவருக்கும் கல்யாணமாகி 4 வயதில் ஒரு மகனும், 8 மாசத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர், பெங்களூரில் ஒரு அரசு கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார்... இவரது மனைவியும் ஒரு டாக்டர்தான்... ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியை. இவர் மனைவி, குழந்தைகளுடன் நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார்..
இவரது தந்தை திருக்கழுக்குன்றத்தில் தங்கி இருக்கிறார்.. தற்போது லாக்டவுன் என்பதால், நுங்கம்பாக்கம் வீட்டுக்கு போகாமல், திருக்கழுக்குன்றம் வீட்டிலேயே கார்த்திக் தந்தி உள்ளார்.. சில நாட்களாக மன உளைச்சலிலும் இருந்துள்ளார்.. எதனால் இந்த மன உளைச்சல் என தெரியவில்லை.. குழந்தைகளை பார்க்க முடியாமல் உள்ளது என்று புலம்பியும் வந்திருக்கிறார். இந்த சமயத்தில்தான் வீட்டுக்கு பின்னாடி இருந்த மரத்தில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலையா என தெரியவில்லை..
போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு கொண்டு சென்றனர்.. வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது ஏன்?.. முதல்வர் பரபரப்பு விளக்கம் சில மாசத்துக்கு முன்பு குடும்பத்தில் சொத்து தகராறும் வந்து போயுள்ளது.. அதில், அப்பா, மகன் ஒரு தரப்பும், அம்மா, மகள் என ஒரு தரப்புமாக மாறி பிரச்சனை வந்துள்ளது.. அது சம்பந்தமாககூட
மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக சொல்கிறார்கள். தகராறு, சண்டை காரணமாகவே பெங்களூரில் இருந்து சென்னை வந்தாலும் நுங்கம்பாக்கம் வீட்டுக்கு போகாமல், அப்பாவுடன் திருக்கழுக்குன்றம் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.. அதனால் அபினய் மரணத்துக்கான காரணம் எதுவென உறுதியாக தெரியவில்லை.. அதனால் இது கொலையா? தற்கொலையா என ஒரு முடிவுக்கு வந்த பிறகே, அந்த மரணத்துக்கான உண்மை காரணமும் போலீசார் வெளிக்கொணருவார்கள் என நம்பப்படுகிறது