மறைமுகமாக கவினை சாடும் லொஸ்லியா!
15 May,2020
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற லொஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒளிப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் லொஸ்லியா மற்றும் கவினின் காதல் கதை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் லொஸ்லியா வெளியிட்ட ஒளிப்படத்தின் கீழ் ‘வாழ்க்கை உங்களுக்கு ஏதாவது கற்பிக்க முயற்சிக்கிறது. எனவே உங்களது தவறுகளை ஏற்றுக்கொண்டு உங்களை கண்ணாடியில் பாருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக கவின் கண்ணாடி முன் நின்று எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் லொஸ்லியாவின் கருத்து கவினை மறைமுகமாக சாடும் வகையில் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.