உலக மலேரியா தினம்: நடிகை கஸ்தூரி டுவீட்
25 Apr,2020
தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த கஸ்தூரி தற்போது அரசியல், சமூக விஷயங்கள் குறித்து அடிக்கடி பேசி பரபரப்பாக இருக்கிறார். டுவிட்டரில் சர்ச்சை கருத்துக்களை பதிவிடுகிறார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் வருகின்றன. ஆனாலும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் உலக மலேரியா தினமான இன்று (ஏப்ரல் 25) நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மலேரியாவை குணப்படுத்த உதவுவது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்றும். அது கொரோனவை குணப்படுத்தாது என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த மருந்தை அதிக அளவில் கையிருப்பு வைத்துள்ள நாடு அமெரிக்கா என்றும் தெரிவித்துள்ளார்.
யாருக்கு இது அதிகம் தேவை? ஈரப்பதமான காலநிலை. யார் அதை சேமித்து வைத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்? அமெரிக்கா. அதை யார் கொடுத்தார்கள் என்று நினைக்கிறேன்? இந்தியா இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.