சீனா அதிபருக்கு முன்பே கொரோனா பற்றி அறிந்திருந்த நித்தியானந்தா;அஜீத்
06 Apr,2020
கொரோனா வைரஸ் தற்போது உலகையே முடக்கி, மூன்றாம் உலகப்போர் போன்ற ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பெரும் அச்சத்திலிருந்துவரும் நிலையில் இந்த கொரோனாவிலிருந்து இந்த உலகம் மீண்டு வர வேண்டும் என்பதே உலக மக்களின் பிரார்த்தனை, எங்களின் பிரார்த்தனையும்கூட.
இந்நிலையில் இந்த அச்சமான சூழ்நிலையில்கூட தமிழனின் நகைச்சுவை உணர்வுகளுக்கு பஞ்சமில்லை, அப்படியொரு செய்திதான் தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.
ஆம், கொரோனா வைரஸ் முதல் முதலில் சீனாவின் வூகாண் மாகாணத்தில்தான் பரவியது, இந்த விடயத்தை சீனா சீரியசாக உணர்ந்துகொண்டது கடந்த 2009-ம் ஆண்டு கார்த்திகை மாதத்தில்தான், இந்த உலகம் அறிந்துகொண்டது 2020-ம் ஆண்டு தை மாதத்தில்.
ஆனால் சீனா அதிபர் உட்பட சீன மக்கள் மற்றும் உலகம் அறிந்துகொள்வதற்கு முன்பே தமிழகத்தின் சர்ச்சை சாமியார் நித்தியானத்த மற்றும் தமிழ் நாட்டில் தலை இருக்கின்ற ஒரே நடிகர் தல அஜித்குமார் ஆகியோர் அறிந்துகொண்டுள்ளார்கள் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா, அதிலும் அஜீத் பல வருடங்களுக்கு முன்பே அறிந்துகொண்டு சாமியார்கள், ஜோதிடர்களையே விஞ்சியுள்ளார் என்றால் நம்புவீர்களா?
இந்த கொரோனாவை முன்பே அறிந்துகொண்டு பலவருடங்களுக்கு முன்பே தன ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு, பொது நிகழ்வுகள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்திப்பதையே முற்றாக தவிர்த்துவிட்டார், அப்போது எங்களுக்கு புரியவில்லை இப்போதுதான் புரிந்துள்ளது.
இதைவிட மேலாக சாமியார் நித்தியானந்தா இந்த உலகிலுள்ள நாடுகளே வேண்டாமென சமீபத்தில் தனித்தீவை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.
இந்த இரண்டு பிரபலங்களையும் அப்போது விமர்ச்சித்தவர்கள், இப்போதான் அவர்கள் இருவரும் எவ்வளவு பெரிய புத்திசாலிகள் என புரிந்துகொள்கிறார்கள் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.