நடிகை சுபர்ணா ஜாஸ் தற்கொலை!
12 Feb,2020
மேற்கு வங்கத்தில் இளம் சின்னத்திரை நடிகையான சுபர்ணா ஜாஸ்,(Subarna Jash,) தற்கொலை செய்துகொண்டார்.
பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்துவந்த சுபர்ணா ஜாஸ், அண்மைக்காலமாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மின் விசிறியில் தூக்கிட்டு அவர் தற்கொலைசெய்துகொண்டுள்ளார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இளம் நடிகையான சுபர்ணா ஜாஸின் மரணம் பெங்காலி சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.