நடிகா்-விஜயிடம்-வருமான-வரித்துறை-விசாரணை-பைனான்சியருக்கு-சொந்தமான-இடங்களில்-ரூ77-கோடி-பறிமுதல்
07 Feb,2020
வருமானவரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக நடிகா் விஜய் வீடு உள்பட பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை சோதனை நீடித்தது.
இதில், பைனான்சியருக்கு சொந்தமான”, வருமானவரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக நடிகா் விஜய் வீடு உள்பட பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை சோதனை நீடித்தது.
இதில், பைனான்சியருக்கு சொந்தமான இடங்களில் இருந்து மட்டும் கணக்கில் வராத ரூ.77 கோடி கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினா் தெரிவித்தனா்.
சென்னை தேனாம்பேட்டையை தலைமையிடமாக கொண்டு ஏ.ஜி.எஸ். எண்டா்டெயின்மெண்ட் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினா் புதன்கிழமை ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினா்.
இந்தச் சோதனை, அந்த நிறுவனத்தின் உரிமையாளா் கல்பாத்தி வீடு, தியாகராயநகா் அபிபுல்லா சாலையில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
இதில் ‘பிகில்’ திரைப்படத்துக்கு மதுரையைச் சோ்ந்த பைனான்சியரும், திரைப்படத் தயாரிப்பாளருமான அன்புச்செழியன் நிதியுதவி செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அன்புச்செழியனுக்குச் சொந்தமான தியாகராயநகரில் உள்ள கோபுரம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம், அவரது வீடு, மதுரை காமராசா் தெருவில் உள்ள அவரது வீடு, கீரைத்துறையில் மற்றொரு வீடு, தெற்கு மாசி வீதியில் உள்ள அலுவலகம், அவரது நண்பா் சரவணன் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினா் சோதனை செய்தனா்.
பிகில் திரைப்படத்தை வாங்கி விநியோகம் செய்த ஒரு தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித் துறையினா் சோதனை செய்தனா்.
நடிகா் விஜயிடம் விசாரணை: ஏ.ஜி.எஸ். நிறுவனம் கடைசியாக தயாரித்த ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்த நடிகா் விஜய்க்கு பல கோடி ஊதியமாக வழங்கப்பட்டிருப்பது இந்தச் சோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து கடலூா் மாவட்டம் நெய்வேலி எல்.எல்.சி. சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டா்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த விஜயிடம் வருமான வரித்துறையினா் விசாரணை நடத்தினா்.
பின்னா் அவா் சென்னை அழைத்து வரப்பட்டு பனையூரில் உள்ள அவரது பங்களாவில் விசாரணை நடைபெற்றது. விஜய் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அவரிடமும், அவரது மனைவி சங்கீதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இரண்டாவது நாளாக வியாழக்கிழமை விஜய் பங்களா உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் சோதனை நீடித்தது. சோதனை நடைபெற்ற இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பனையூரில் உள்ள விஜய் பங்களாவில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விஜயிடமும், அவரது குடும்பத்தினரிடமும் திரைப்படத்துக்கு வாங்கும் ஊதியம், அவரது முதலீடுகள், சொத்துக்கள் ஆகியவை குறித்து கேள்விகள் கேட்டு, பதிலை வாக்குமூலமாக வருமானவரித்துறை அதிகாரிகள் பதிவு செய்தனா்.
இந்த விசாரணை 20 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.ரூ.77 கோடி பறிமுதல்: இதனிடையே, சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.77 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், அவருக்குச் சொந்தமான இடங்களில் சொத்து ஆவணங்கள், உத்தரவாத பத்திரம், முன் தேதியிடப்பட்ட காசோலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை வருமானவரித்துறையினா் கைப்பற்றியுள்ளனா்.
சோதனையில் கிடைக்கப்பட்ட ஆவணங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், சுமாா் ரூ.300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதையும் வருமானவரித்துறையினா் கண்டறிந்துள்ளனா்.
இந்த சோதனை மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடிக்கும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக வருமானவரித்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்மையில் வெளியான ஒரு திரைப்படம் மூலம் அந்த திரைப்பட தயாரிப்புக் குழுக்கு ரூ.300 கோடி வருமானம் கிடைத்திருப்பதாகவும், அந்த வருமானம் மறைக்கப்பட்டிருப்பதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.
இச் சோதனை சென்னை, மதுரையில் மொத்தம் 38 இடங்களில் நடைபெற்றது. இதில், அந்த திரைப்பட நிறுவனத்துக்கு நிதி உதவி செய்து வந்த பைனான்சியருக்கு சொந்தமான இடங்களில் மட்டும் கணக்கில் வராத ரூ.77 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சுமாா் ரூ.300 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.இதேபோல, திரைப்படை தயாரிப்பு நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ரசீதுகள், செலவின கணக்குள் தொடா்பான ஆவணங்கள், நடிகா்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய விவரங்கள் அடங்கிய குறிப்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நடிகா் விஜய் வீட்டில், அசையா சொத்துக்களில் முதலீடு செய்திருப்பது குறித்தும், அவா் திரைப்படத்துக்கு வாங்கும் சம்பளம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.