ஓடும் காரில் நடிகை பலாத்காரம்; விசாரணையை துவக்க உத்தரவு!
31 Jan,2020
கேரளாவில் ஓடும் காரில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணையை துவங்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் நடிகையை கடத்திய கும்பல் ஓடும் காரில் அவரை பலாத்காரம் செய்ததோடு, அதனை செல்போனில் படம்பிடித்தது. இவ்வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட நடிகர் திலீப், சிறையிலடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இவ்வழக்கிலிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி அவர் தொடர்ந்த வழக்கும் கேரள உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் பலாத்கார வழக்கை 6 மாதத்துக்குள் முடிக்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது. இந்நிலையில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.