நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும்; சீமான்!
25 Oct,2019
நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிகில் திரைப்பட விவகாரத்தில், பழி வாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
இதுபோல செய்வதால் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படுவதாகக் கூறிய சீமான், கத்தி, சர்கார் திரைப்படங்களைப் போல் பிகில் பிரச்சனையிலும் விஜய்க்கு உறுதுணையாக இருக்கப் போவதாகத் தெரிவித்தார்