வில்லன் நடிகர் ரகுவரன் – ரோகினியின் மகன் சினிமாவில் நுழைகிறாரா?
19 Oct,2019
பாஷா உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களில் வில்லனாக நடித்தவர் ரகுவரன். அந்த படத்தின் மூலம் மாஸ் வில்லனாக வளர்ந்தவர் அவர். குணச்சித்திர நடிகராகவும் அவர் தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலம். அவரது மறைவு தற்போதும் தமிழ் சினிமாவில் ஈடுசெய்யமுடியாத ஒன்றாக இருக்கிறது.
ரகுவரனுக்கு நடிகை ரோகினியுடன் 1996ல் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ரிஷிவரன் என்கிற மகன் உள்ளார். 2004ல் விவாகரத்து பெற்று ரகுவரன் மற்றும் ரோகினி பிரிந்துவிட்டனர். அதன் பிறகு 2008ல் ரகுவரன் மறைந்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது ரிஷிவரன் சினிமாவில் காலடி எடுத்து வைப்பாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள ரோகினி, “அவருக்கு சினிமா துறைக்கு வர ஆர்வம் இல்லை. மருத்துவத்தில் தான் அதிகம் ஆர்வம்” என கூறியுள்ளார்