மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் அமிதாப் பச்சன்!
18 Oct,2019
பிரபல ஹொலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மூன்ற நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1982ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு விபத்தின்போது வைரஸ் பாதிப்புடன் இருந்த ஒருவரின் ரத்தம் அமிதா பச்சனுக்கு தவறுதலாக செலுத்தப்பட்டது. இதனால் அவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொடர்ந்து சிகிச்சைபெற்று வந்த அவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மும்பை சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் சுப்பர் ஸ்டார் என இரசிகர்களால் கொண்டாடப்படும் இவருக்கு தற்போது 77 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.