பிக்பாஸ் சேரனுக்கு மிரட்டல் விட்ட பெண்!
14 Oct,2019
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்த முக்கிய போட்டியாளராக இருந்தவர் இயக்குனர் சேரன். அவருக்கு இறுதியில் ஒழுக்கமானவர் என்ற விருதும் கொடுக்கப்பட்டது.
அதே வேளையில் பிக்பாஸ் வீட்டில் அவர் சக போட்டியாளர் மீராவால் பிரச்சனை எழுந்தது. மீரா அவர் மீது சொன்ன புகார் போலியானது என கேமிரா காட்சி மூலம் நிரூபிக்கப்பட்டது.
ஆனால் மீரா அதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார். பின்னர் சில நாட்களில் பிக்பாஸ் வீட்டை வீட்டு குறைவான ஓட்டுகளால் மீரா வெளியேறினார்.
அண்மைகாலமாக சினிமா வட்டாரத்திலும் அவருக்கு பிரச்சனை எழுந்துள்ளது. இந்நிலையில் சேரன் உங்களுக்கு நல்லாவே தெரியும், நான் வெளிப்படையாக சொல்ல விடாம தடுக்கிறார், சீக்கிரம் வருத்தப்படுவீங்க என கூறியுள்ளார்.