லைக்காவை ஏமாற்றிய ஐங்கரன் கருணா- X ரே Report இதோஸ
28 Sep,2019
யாழ் இணுவிலில் அரிசி வியாபாரத்தில் இருந்த கருணா மூர்த்தி என்னும் கருணா, அதில் பெரும் நஷ்டம் அடைந்து. பின்னர் லண்டன் வந்து ஐங்கரன் என்னும் ஸ்தாபனத்தை நிறுவி தென்னிந்திய திரைப்படங்களை லண்டனிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் வெளியிட்டு வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவர் தென்னிந்திய திரைப்படங்கள் சிலவற்றை அருண் பாண்டியனோடு இணைந்து தயாரித்தும் வந்தார். இன் நிலையில் அவர் சில திரைப்படங்களால் நஷ்டமடையவே, அவரை பலர் தேட ஆரம்பித்தார்கள். அந்தவேளை அவருக்கு சுமார் 5 கோடி கடன் இருந்தது. இதனால் அவர் லண்டன் ஓடி வந்து மறைந்திருந்தார்.
இவ்வாறு மறைந்து வாழ்ந்து வந்த கருணாவை அழைத்த லைக்கா உரிமையாளர் சுபாஷ் அவர்கள், அந்த கடனை தான் செலுத்துவதாக கூறினார். வியாபரம் என்றால் லாப நஷ்டம் வரும் அதனை நாம் சரிசெய்து முன்னேறவேண்டும் என்று கூறி மறு வாழ்வு அளித்தார். ஆனால் மறு வாழ்வு தந்த லைக்கா உரிமையாளருக்கே ஆப்பு வைப்பார் கருணா என்று எவரும் நினைக்கவில்லை. லைக்கா நிறுவனம் ஆரம்ப காலத்தில் சினிமாபடங்களை தயாரிக்கும் போது, கருணாவின் ஐங்கரன் நிறுவனம் ஊடாகவே படங்களை வெளியிட்டு வந்தார்கள்.
பின்னரே லைக்கா புரொடக்ஷன் என்று மாற்றினார்கள். அப்படி மாற்றினால் கூட, திரு.சுபாஷ் அவர்கள் கருணாவுக்கு எல்லா சுதந்திரத்தையும் கொடுத்திருந்தார். ஆனால் அவர் சுபாஷுக்கு தெரியாமலே பல டீல்களை போட்டு கோடி கோடியாக பணத்தை சுருட்டினார். திரைப்படங்களை, வெளிநாடுகளுக்கு விற்று அதனூடாக வரும் காசை கணக்கில் காட்டாமல் மறைத்தார். திரைப்பட குழுவினர் வந்து கதை சொன்னால், உடனே அந்த படத்திற்கு ஓகே சொல்லி, அவர்களிடமே ஒரு தொகையை கட்டிங்காக வாங்கிவிடுவார். பின்னர் லைக்கா நிறுவனம் அந்த படத்தை எடுக்கும். இப்படி சகலரிடமும் கட்டிங் வாங்கி, ஒரு கட்டிங் மன்னனாகா மாறிவிட்டார். தற்போது லைக்கா நிறுவனத்திற்கே தெரியாமல் இந்தியன் – 2 படத்தை எடுக்க ஒப்புக் கொண்டு அதில் கைச்சாத்திட்டும் உள்ள விடையம் வெளியாகியுள்ளது.
இவ்வாறு இவர் லைக்கா நிறுவனத்தை, ஏமாற்றி சுமார் 120 கோடியை ஏப்பம் விட்டுள்ளதாக அதன் கணக்காளர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்தே லைக்கா நிறுவனம் கருணா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்கள். இருப்பினும் தனது செல்வாக்கை பயன்படுத்தி இவர் சென்னையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக இணையம் மேலும் அறிகிறது.