மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘குரு’ படத்தில் ஒரு காட்சி வரும். ‘குருபாய்’ அபிஷேக் பச்சன், `உலகத்துல எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. ரெண்டு டைப் செருப்போடுச் சுத்திட்டு இருக்கேன். ஒண்ணு வெள்ளியில, இன்னொண்ணு தங்கத்துல. யாருக்கு எது தேவையோ, அதால அடிச்சுட்டு முன்னேறிட்டே
இருப்பேன்’ என்பார். குருபாயின் கரை வேட்டி கட்டிய ‘அப்டேட் வெர்ஷன்’தான் இந்தக் கட்டுரையின் ஹீரோ.
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘குரு’ படத்தில் ஒரு காட்சி வரும். ‘குருபாய்’ அபிஷேக் பச்சன், `உலகத்துல எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. ரெண்டு டைப் செருப்போடுச் சுத்திட்டு இருக்கேன். ஒண்ணு வெள்ளியில, இன்னொண்ணு தங்கத்துல. யாருக்கு எது தேவையோ, அதால அடிச்சுட்டு முன்னேறிட்டே
இருப்பேன்’ என்பார். குருபாயின் கரை வேட்டி கட்டிய ‘அப்டேட் வெர்ஷன்’தான் இந்தக் கட்டுரையின் ஹீரோ.
நம்ம ஹீரோ, சர்ச்சைகளுக்குப் பெயரெடுத்த ஓர் அமைச்சர். இவர் சந்திக்காத நெருக்கடிகள், வம்பு, வழக்குகள் இல்லை. பலரின் வாயை ‘மெல்ல’ வைத்திருக்கின்றன இவரது சர்ச்சை செய்திகள். மத்தியில் பலரின் கோபப்பார்வை படிந்தாலும், சில சித்துவேலைகளால் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் வித்தை அறிந்தவர். தன் சொந்த மாவட்டத்திலும், அமைச்சர் பதவியிலும் அசைக்க முடியாத சக்தியாக இருப்பவர்.
அரசியலில் இருப்பவர்களுக்கு, இளைப்பாற ஒரு மரம் தேவைப்படும். சிலர் கோப்பைகளுடன் ஒதுங்குவர்; இன்னும் சிலர் கோதைகளுடன் ஒதுங்குவர். நம் ஹீரோ, இரண்டாம் ரகம். பணியிட மாற்றம் கேட்டு வரும் பெண்கள் தொடங்கி, விழாக்களுக்குச் செல்லுமிடத்தில் சந்திக்கும் பெண்கள் வரை 50 வயதைக் கடந்த பெண்களைக் கண்டாலே குஷியாகிவிடுவார் அமைச்சர். லிட்டர்கணக்காக ஜொள்ளை வடியவிட்டு, குழைந்துக் குழைந்து அவர் பேசுவதை ரசிக்கும் உதவியாளர்கள், `அண்ணனுக்கு மச்சத்துக்குள்ள உடம்புய்யா. எப்படி கரெக்ட் பண்றாரு பாரு!’ என்று பெருமையடித்துக்கொள்வார்கள். அப்படித்தான், ஒரு துறையின் பெண் உயரதிகாரியும் அமைச்சரிடம் சிக்கிக்கொண்டார்.
50 வயதைக் கடந்த அந்தப் பெண் அதிகாரிக்கும் அவரின் கணவருக்கும் சுமுகமான உறவு இல்லை. பெண்களை அடிமைப்படுத்தி ரசிக்கும் ‘சாடிஸ்ட்’ மனோபாவம் இருக்கும் கணவரை வெறுத்து ஒதுக்கியிருந்தார் அதிகாரி. அப்போதுதான், அவர் பணியாற்றிய இடத்தில் விழா ஒன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த நம்ம அமைச்சர், அதிகாரியின் துடுக்கான பார்வைக்குள் விழுந்துவிடஸ ஏக்கம் எகிறிவிடஸ தூக்கமில்லா இரவுகள் அதிகரித்தன. எப்படியோ மேலிடத்தில் பேசி, அந்த அதிகாரியை தனது துறைக்கு வரவழைத்துக்கொண்டார்.
தன் துறையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அமைச்சர் முன்கூட்டியே வந்துவிட்டாலும், அந்தப் பெண் அதிகாரி வரும் வரை காத்திருந்து நிகழ்ச்சியைத் தொடங்கும் கூத்தெல்லாம் அரங்கேறியது. `மேடம்ஸ மேடம்ஸ’ என இவர் மட்டையாகப் பணிவதைக் கண்டு, ‘இப்படி ஒரு நல்ல மனிதரா!’ என்று அந்த அதிகாரியும் கரைந்துவிட்டார். ஒருகட்டத்தில் பொன்மாலைப் பொழுதுகளில் இளைப்பாற இருவரும் கடற்கரையோர ரிசார்ட்டுகளில் ஒதுங்கத் தொடங்கினர். `சார்’, `மேடம்’ எல்லாம், யாருமில்லாப் பொழுதுகளில் `டார்லிங்’, `பேபி’யாக மாறின. ‘டார்லிங், உனக்கு என்ன வேணும்?’ எனக் கேட்க, ‘நீங்க எப்பவும் இதே மாதிரி என்கிட்ட பேசிட்டு இருந்தா போதும்’ என அதிகாரி சொல்லஸ ஒரே ரொமான்ஸ்தான். அடுத்த சில வாரங்களிலேயே காதல் பரிசாக புத்தம் புது பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை பெண் அதிகாரிக்குப் பரிசளித்தார் அமைச்சர். இந்தத் தகவல்கள் எல்லாம் அமைச்சரின் வீட்டுக்கும் அரசல்புரசலாகத் தெரியவர, கிரீன்வேஸ் சாலை வீட்டில் தீப்பற்றிக்கொண்டது.
சமீபத்தில் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார் அமைச்சர். பின்னாலேயே சத்தமில்லாமல் வந்து சேர்ந்தார் அந்தப் பெண் அதிகாரி. மொத்தம் நான்கு நாள்கள். இருதரப்பையும் தனித்தனி ஹோட்டல்களில் தங்கவைத்த அமைச்சர், ஒரே நேரத்தில் குடும்பத்தையும் கவனித்துஸ பெண் அதிகாரியையும் கவனித்துஸ கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கிவைத்த கதைகளைக் கேள்விப்பட்டு வாயடைத்துபோனார்களாம் அமைச்சர் மற்றும் அந்த அதிகாரி ஆகியோர் பற்றி அறிந்த பலரும். அமைச்சரும் பெண் அதிகாரியும் ஜோடி போட்டுக்கொண்டு நகர்வலமும் வந்துள்ளனர். அப்போது வைர நெக்லஸ் வாங்கி பரிசாக அமைச்சர் அளிக்க, அதிகாரியின் முகமெல்லாம் மத்தாப்பாக மலர்ந்து விட்டதாம். விஷயத்தை லேட்டாகக் கேள்விப்பட்ட அமைச்சரின் மனைவி, ஹோட்டல் அறையில் ஆடிய தாண்டவம், வெளியே வரும்போது அமைச்சரின் கன்னத்தில் பிரதிபலித்தது. அடுத்த நாளே, அதிகாரியும் கப்சிப் என ஊருக்குத் திரும்பிவிட்டார்.
புத்திசாலி அமைச்சர் எனப் பெயரெடுத்த நம் ஹீரோ, பெண்கள் விஷயத்தில் மட்டும் படு வீக். மலையாள பார்ட்டி ஒன்று, இவரிடம் சிக்கிச் சின்னாபின்னமாகி, இவரைப் பழிதீர்ப்பதற்காக இப்போது வெறிகொண்டு அலைவதெல்லாம் வரலாறு.
சில மாதங்களுக்கு முன்னர் துணை நடிகை ஒருவரை தன் காரிலேயே வைத்துக்கொண்டு தென்மாவட்டம் நோக்கி இரவில் பயணமாகியுள்ளார் அமைச்சர். இதை நேரில் பார்த்துவிட்ட மாவட்ட துணை ஒருவர், `என்னண்ணே இப்படி வெளிப்படையாவே கூட்டிட்டு வர்றீங்க?’ என்று கேட்க, `சும்மா அசதிக்காகக் கூட்டிட்டு வந்தேன்பா. சுகர் வந்ததுலயிருந்து முன்ன மாதிரிலாம் முடியல’ என்று சிரித்துள்ளார்.
கட்சியின் பெரியவருக்கும் நம்ம ஹீரோவுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். அமைச்சரால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறார் பெரியவர். நம்ம ஹீரோவை வீழ்த்த எவ்வளவோ அஸ்திரங்களை பெரியவர் ஏவிப்பார்த்தும், எதுவும் கைகூடவில்லை. இப்போது அமைச்சரின் செல்லமாக வலம்வரும் பெண் அதிகாரி, பெரியவரிடம் மிகுந்த விசுவாசம் கொண்டவராம். அமைச்சர் தன்னை உபயோகப்படுத்திக்கொண்டது எதிர்காலத்தில் தெரியவரும்பட்சத்தில், துறையில் நடந்த தில்லுமுல்லுகளை பெரியவருக்கு ஆவணமாக எடுத்துக் கொடுக்கவும் அதிகாரி தயங்க மாட்டார். படிப்படியாக தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டிக்கொண்ட நம்ம ஹீரோ, வீழப்போவது பெண் சபலத்தால்தான் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
‘தனி ஆவர்த்தனம்!’
கர்னாடக இசையில் புகழ்பெற்ற பாடகி ஒருவரும் அமைச்சரின் அதே சுற்றுலாவில் பங்கேற்றாராம். நான்கு நாள்கள் தனியறையில் பாடகி வாசிக்க, அதை அமைச்சர் ரசித்துச் சிலிர்த்திருக்கிறார். இந்தத் தனி ஆவர்த்தனத்தை, உடன் சென்றிருந்த குடும்பத்தினருக்கோ நெருக்கமான பெண் அதிகாரிக்கோ தெரியாமால் பார்த்துக்கொண்ட அமைச்சரின் சாமர்த்தியத்தைச் சொல்லிச் சிலாகிக்கிறார்கள் அவருடைய உதவியாளர்கள்!