– கதவை உடைத்து சேரனை காப்பாற்ற நினைத்த அமீர்
24 Aug,2019
கேப்டன் விஜயகாந்தின் நண்பரான இப்ராஹிம் ராவுத்தரின் ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் ஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நீண்ட இடைவெளிக்குப் பின் ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆரிக்கு ஜோடியாக இலங்கையை சேர்ந்த சாஷ்வி பாலா நடித்துள்ளார்.
மேலும், மொட்டை ராஜேந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை கவிராஜ் இயக்கும் இப்படத்தை மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரின் மகன் முகமது அபுபக்கர் தயாரிக்கிறார். கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கும் இப்படத்திற்கு லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
நியு ஏஜ் ஏலியன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரபல இயக்குநர் அமீர், பிரபல இயக்குநர் சேரனுக்கு பிக் பாஸ் வீட்டில் நேர்ந்த விஷயம் குறித்து பேசினார்.
இயக்குநர் அமீர் பேசுகையில், “எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றியைப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், அதில் சேரன் இருப்பதால் பேசுகிறேன்.
அவரை நான் பிரமிப்பாக பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பின்னர் கல்லூரி விழாவிற்கு வந்த போது, 2000 பேர் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்.
அத்தனை மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில்.. அவரது நிலையை பார்த்ததும், கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது”.
“அந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததுக் கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். மேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது” எனவும் தனது கருத்தினை தெரிவித்தார்.
ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அவர், சினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள் தெரியுமா? நட்சத்திரம் என்பது மின்னி மறைவது, அதுபோல தான் சினிமாக்காரர்களும். ஆகவே, புகழும் வெற்றியும் நிரந்தரமில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, சினிமாத்துறையில் இருப்பவர்கள் அதைப் புரிந்துக் கொண்டு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆகையால், வெற்றியடைந்த பின் மற்றவர்களையும் கைத்தூக்கி விடுங்கள். நீங்கள் போகும் போது உங்களுடன் பயணித்தவர்களையும் உங்களுடனே கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் பேசியுள’ளார்