இப்படியெல்லாம் செய்கிறாரா சேரன்!
23 Aug,2019
பிக்பாஸில் ஆரம்பம் முதலே கவீன்- லொஸ்லியாவின் நெருக்கம் சேரனுக்கு பிடிக்கவில்லை.
இதனால் அவ்வப்போது இருவரையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கண்டித்துவரும் அவர், நேற்று தர்ஷனிடம், கவீனை லொஸ்லியாவிடம் பேசுவதை குறைத்து கொள்ள சொல்லுங்கள் என கூறி செம்ம பல்ப் வாங்கினார்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில், கவீனிடம் நேராக சென்று பேசிய சேரன், லொஸ்லியா என்கிட்ட பேசாதது பற்றி எனக்கு ஒரு துளி கூட கவலை இல்லை என்றார்.
அதே லொஸ்லியாவிடம் சென்று பேசியபோது, நீ என்கிட்ட பேசலனு நைட் முழுக்க உக்காந்து வருத்தப்பட்டேன் என கூறியுள்ளார்.
இப்படி டைட்டிலுக்காக மாற்றி மாற்றி பேசுவதா? என சேரனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
பிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா!
பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் லொஸ்லியாவை ஒருதலையாக காதலித்து வந்தார், கவீன். அதன்பின் சாக்ஷி இடையில் வர பிக்பாஸ் வீடே ரணகளமானது.
அது மிக பெரிய அளவில் வெடிப்பதற்குள் சாக்ஷி எலிமினேட் ஆனார். இதனால் மீண்டும் ஒன்றான கவீன்- லொஸ்லியா நட்பிற்கு சேரன் குறுக்கே வர அவரை எப்படியோ ஒரு வழியாக சமாளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவீன் எப்போதும் உடுத்துகின்ற சிவப்பு நிற டி-ஷர்ட்டை நேற்றைய எபிசோடில் லொஸ்லியா உடுத்தியுள்ளார். இதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என அவர் செய்துள்ளார். ஆனால் கழுகாக பிக்பாஸை பார்த்துவரும் நெட்டிசன்ஸ் இதை கண்டுப்பிடித்துவிட்டனர்.