வனிதா தூண்டிவிட்டதால் போர்களமான பிக்பாஸ் வீடு!
15 Aug,2019
பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நேர்கொண்ட பார்வை பட நடிகை அபிராமி வெங்கடாசலம் முகேனை காதலித்து வருவதாக தொடர்ந்து கூறி வந்தார்.
இன்று நடிகை வனிதா தூண்டிவிட்டதால் அபிராமி இன்று அபிராமி பெரிய பிரச்சனையை ஏற்படுத்தினார். “உனக்கு அசிங்கமே இல்லையா.. கட்டிபுடிச்சு உருண்டுகிட்டிருக்க! ” என வனிதா அபிராமியை திட்டினார். அதன் பிறகு அபிராமி பெரிய பஞ்சாயத்தை கூட்டிவிட்டார்.
“முகேன் முன்னேற்றத்திற்கு நான் தடையாக இருப்பதாக கமல்ஹாசன் கூறினார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அனைத்து குற்றச்சாட்டும் என் மீது தான் வருகிறது. நான் யார் கையையும் பிடித்து இழுக்கவில்லை. இதில் முகேனுக்கும் பங்கு இருக்கிறது” என அபிராமி கூறினார்.
இது பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருக்கும்போது முகேன்-அபிராமி இடையே வாக்குவாதம் நடந்தது. அது இறுதியில் சேரை தூக்கி அடிக்க செல்லும் அளவுக்கு சண்டையாக மாறிவிட்டது.