பிக்பாஸை விட்டு வெளியேற சொல்கிறார்கள்..
22 Jul,2019
நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை மூன்று வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை பிக்பாஸ் பற்றி கடும் விமர்சனங்கள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. பெண்கள் ஆபாசமாக உடை அணிகின்றனர், ஒருவர் நான்கு பேரை காதலிக்கிறார் என் இந்த நிகழ்ச்சி கலாச்சார சீர்கெடு ஏற்படுத்துவதாக விமர்சனம் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த கமல் விமர்சனங்கள் பற்றி பேசினார். கமல்ஹாசன் இப்படிப்பட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கூடாது என்கிறார்கள். “அவர் ஒரு intellectual. அந்த நிலையை இது தாழ்த்திக்காட்டுகிறது” என அறிவுரை சொல்கிறார்கள்.
“நான் டிகிரி வாங்கிட்டு இங்க வரல. நான் கல்வியில் அன்றாடம் காய்ச்சி. நான் நிதம் கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் intellectual என்ற நிலையை தொடவில்லை. தொடாமலே சாகலாம். பல கோடி மக்களுடன் பேச இது எனக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு.