நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட மருத்துவக்கல்வியில் சேர்க்கவில்லை – சூர்யா!
21 Jul,2019
நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமது அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக்கல்வியில் சேர்க்க முடியவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
அவர் தமது டிவிட்டர் பதிவில் சமமான தேர்வு வைப்பதைவிட சமமான கல்வியை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீது மத்திய அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துகளை அளிக்கும் வகையில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் மத்திய அரசின் இணையத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
நீட் தேர்வு அறிமுகம் ஆவதற்கு முன்னர் தனது அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர உதவியதாக சூர்யா கூறியுள்ளார். ஆனால் நீட் தேர்வு வந்த பிறகு அரசுக் கல்லூரி மாணவர் ஒருவரை கூட தனது அறக்கட்டளையால் மருத்துவக்கல்லூரியில் சேர்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.