நம்ம இளைய தளபதிக்கு நிகர் இளைய தளபதிதான்
19 Jun,2019
தொடக்கத்தில் நமது இளைய தளபதி விஜய் அவர்களை நான் வெறும் சோப்பு போட்டு வளரும் நடிகர் (ரசிகன் திரைப்படத்தில் நடிகை சங்கவிக்கு சோப்பு போடும் காட்சியில்) என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல அவர் மீது நான் வைத்திருந்த எண்ணம் மாறியது. அது எப்படி என்று இங்கே சுருக்கமாக விவரிக்கிறேன்.
ரசிகன் திரைப்படத்தில் குளியலளையில் நடிகை சோப்பு போடும் காட்சியை பார்த்ததிலிருந்தே நடிகர் விஜய் என்றாலே எனக்கு ஏனோ பிடிக்காமல் போனது. அந்தப்புறம் எனும் திரைப்படத்தில் பார்த்திபன் நடித்திருப்பார். இதற்கு பிறகு வெளிவந்த படம் நினைவில் இல்லை ஆனால் அந்த படத்தில் வரும் ஒரு வசனம் நினைவில் நிற்கிறது. அவரு புறாவுக்கே மணி அடிச்சவரு என்று வரும். அந்த படத்தில் பார்த்திபன் நடிப்பை அப்படியே காப்பி அடித்திருப்பார். அதேபோல் சிம்பு சிறுவயதில் ஒரு திரைப்படத்தில் சிந்திக்கும்போது இரண்டு கண்களிலும் கருவிழிகளை இடமும் வலமும் வேகமாக அசைத்து சிந்திப்பது போலவே பூவே உனக்காக திரைப்படத்திலும் நம்பியாரையும் நாகேஷையும் சேர்த்து வைக்கும் காட்சியில் சிம்புவின் நடிப்பை அப்படியே ஏற்று நடித்திருப்பார். சில திரைப்படங்களில் எனக்கு என்னடா இது என்று சலிப்பாக இருக்கும்
ஆனால் பல திரைப்படங்கள் உதாரணமாக காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் நடிகர் விஜயின் கதாபாத்திரமும் அவரது நடிப்பாற்றலும் என்னை சிந்திக்க வைத்தது. தொடர்ச்சியாக பூவே உனக்காக, கண்ணுக்குள் நிலவு, நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், வசீகரா உட்பட பல திரைப்படங்களில் தளபதி விஜய்-ன் நடிப்பாற்றலும், அவரது தனிபணியும் என்னை மிகவும் வியக்க வைத்தது. என்னை அவர் அப்படியே ஆட்கொண்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும். அந்தளவிற்கு தனது நடிப்பிலும் சரி, பழகும் விதத்திலும் சரி விஜய்க்கு நிகர் விஜய்தான் என்பதை நான் அறுதியிட்டு ஒப்புக் கொள்கிறேன்.