நடிகர் சங்கத்தில் 300 பேர் நீக்கப்பட்டு 450 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்- கணேஷ்
17 Jun,2019
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் திடீரென 300 பேர் நீக்கப்பட்டு 450 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் ஐசரி கணேஷ் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “தபால் வாக்குகள் அனுப்பப்படும் முறை குறித்து கேள்வியெழுப்பினோம்.
உண்மையில் தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து கடிதமொன்றை கையளித்துள்ளோம். தேர்தல் அதிகாரி நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஐசரி கணேஷின் முறைப்பாடு குறித்து நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரான விஷால் கருத்து தெரிவிக்கையில், “பொதுவாக விதிமுறைகளின் அடிப்படையில், விதிகளை மீறிய உறுப்பினர்களே நீக்கப்பட்டுள்ளனர் என விளக்கமளித்துள்ளார்.