நாகேஸ்வரன் என்கிற நாகேஷ்! (2)

13 Jun,2019
 

 

ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம், காலையில் ஆபீசுக்கு போனால், 'நான் உண்டு, என் வேலை உண்டு...' என்று இருப்பேன்.
ஒருநாள், எனக்குள் ஏதோ ஒரு வெறி! ஆபீசின் பல்வேறு பிரிவுகளுக்கு போய், 'இங்கே, பாட்டு, நாடகம் போன்ற விஷயங்களை ஊக்குவிக்கும் விதமாக, 'கலாசார பிரிவு' இயங்கி வருகிறதா...' என்று கேட்டேன்.
ம.ரா., என்று ஒருவர், நாடகங்களை எழுதி, இயக்கி வருவதும், அந்த நாடகத்தில், ரயில்வேயில் வேலை பார்க்கிறவர்கள் நடிப்பதும் தெரிய வந்தது. அவரை போய் பார்த்தேன்.
ஒல்லியான உடம்பு கொண்ட நான், அவர் முன் போய் நின்றேனே ஒழிய, அவர் கண்ணுக்கு, நான் தென்படவே இல்லை. மெதுவாக செருமி, ஒரு வழியாக அவர் கவனத்தை ஈர்க்க, 'என்னய்யா வேணும்...' என்றார்.
'நீங்க, நாடகம் போடறீங்களாமே... அதுல, நடிக்கணும்ன்னு விரும்பறேன்...' என்றேன்.
'இந்த உடம்பை வெச்சுக்கிட்டு நடிக்க வந்துட்டியா... இந்த காலத்துல, யார் யாருக்கு, நடிக்க ஆசை வரணும்ன்னு விவஸ்தையே இல்லாம போயிடுச்சுப்பா...' என்றார், இடக்கான குரலில்.
அவர் சொன்னதற்காக, நான் கவலைப்படவில்லை.
'சார்... எனக்கு நடிக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு... உங்க நாடகத்துல ஏதாவது ஒரு சின்ன கதாபாத்திரம் கொடுத்தீங்கன்னா போதும், சந்தோஷமா ஏத்துக்குவேன்...' என்று, கெஞ்சிய குரலில் கேட்டேன்.
'நடிச்ச அனுபவம் ஏதாவது இருக்கா...'
'இல்லை சார்... ஆனா, ஒரு சின்ன வாய்ப்பு கொடுத்தீங்கன்னா, அதுல என் திறமையை காட்ட முடியும்ன்னு தன்னம்பிக்கை இருக்கு...' என்றேன்.
அடுத்த சில நிமிடங்களுக்கு, ஒன்றும் பேசாமல் ஏதோ யோசனையில் இருந்தவர், 'ம்... ஒரு சின்ன கதாபாத்திரம் இருக்கு... வயித்து வலிக்காரனா நடிக்கணும்...' என்றார்.
'சரி, சார்!' என்றேன்.
'சின்ன கதாபாத்திரம் தானேன்னு நினைக்க கூடாது. ஒத்திகைக்கெல்லாம் தவறாம வந்துடணும்...' என்றார்.
'ரொம்ப நன்றி!' எனக்கூறிய எனக்கு, சந்தோஷமான சந்தோஷம். நாமும் மேடை ஏறப் போகிறோம் என்பதை, என்னால் நம்ப முடியவில்லை.
மறுநாள்-
ஆபீஸ் முடிந்து, நாடக ஒத்திகை நடக்கும் இடத்திற்கு போனேன்.
'இப்படி உட்கார்... உன், காட்சி வரும்போது சொல்றேன்...' என்றார், இயக்குனர்.
ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டேன். அடுத்த, காட்சியில் கூப்பிடுவாரோ என்று, ஒவ்வொரு காட்சியாக எதிர்பார்த்து காத்திருக்க, நாடகம் முடியப் போகிற கட்டத்தில், 'ம்... வா!' என்றார்.
'காட்சியில், டாக்டரம்மா உட்கார்ந்திருப்பாங்க... அவங்க, ஒரு வயித்து வலி நோயாளியை பார்த்துகிட்டு இருக்கும்போது, கதாநாயகன் போய் அவங்களை பார்த்து பேசுகிறார் போல, காட்சி. நீ தான் அந்த வயித்து வலி நோயாளி... உனக்கு பெரிசா வசனமெல்லாம் கிடையாது...
'டாக்டரம்மா, அடுத்த, நோயாளியை வரச்சொன்னதும், நீ போகணும்... 'என்ன பிரச்னை...'ன்னு டாக்டர் கேட்க, 'வயித்து வலி தாங்க முடிலையே...'ன்னு சொல்லணும். அவங்க மருந்து எழுதி கொடுத்ததும், அந்த சீட்டை வாங்கிட்டு வந்துடணும். இது தான் காட்சி. ஒழுங்கா நடிக்கணும்...' என்று, விளக்கினார், இயக்குனர்.
ஒன்றரை மாதம் ஒத்திகை முடிந்து, நாடக அரங்கேற்றத்துக்கான தேதி குறிக்கப்பட்டது.
முதல் தடவையாக மேடை ஏறப்போகிறோம் என்ற சந்தோஷம்; ஒழுங்காக நடிக்க வேண்டுமே என்ற பயம். இப்படி ஒரு கலவையான உணர்வுடன், மேடையின் பக்கவாட்டில், நடிக்க வேண்டிய காட்சிக்காக காத்திருந்தேன்.
'அடுத்த பேஷன்ட்...' என்று டாக்டர் சொல்ல, காட்சி ஆரம்பித்தது. 'சட்டென்று உள்ளே போ...' என்று, என்னை லேசாக தள்ளினார், இயக்குனர்.
'டாக்டர்...' என்று வீறிட்டு அலறியபடி, மேடைக்குள் நுழைந்தேன்.
திடீரென்று இப்படி ஒரு வீறிடும் குரலை, எதிர்பார்க்காத பார்வையாளர்கள், சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தனர். நிஜமாகவே வயிற்று வலியால் துடிக்கிற நோயாளி போல, உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்தபடி, டாக்டருக்கு பக்கத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்தேன்.
'என்ன உடம்புக்கு...' என்று டாக்டர் கேட்க, நான் அதை சட்டையே பண்ணாமல், வயிற்றை பிடித்து, 'அம்மா...' என்று துடித்தேன். என் கையில் ஒரு சீட்டு இருந்தது. அதை டாக்டரிடம் நீட்டினேன். அதை, வாங்குவதற்கு தன் கையை எடுத்து வந்தபோது, சட்டென்று என் கையை பின்னுக்கு இழுத்து, உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி, 'ம்மா ஆஆஆ...' என்றேன்.
மறுபடி சீட்டை கொடுக்க கையை நீட்டினேன். டாக்டர், அதை வாங்க, கையை நீட்டியபோது, என் கையை பின்னால் இழுத்து, 'அம்ம்மா... அம்ம்மா...' என்று கத்தினேன்.
ஒன்றரை நிமிடங்களுக்கு, வித விதமான ஏற்ற இறக்கங்களை குரலில் காட்டி, 'அம்மா...' என்று அலறி, துடித்து, கதறினேன். 'யாரடா இவன்... திடீரென்று வந்து இப்படி அமர்க்களப்படுத்துகிறானே...' என்று பார்வையாளர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி கலந்த அதிசயம்; கைத் தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.
முதல் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருந்த, செக்கச் சிவந்த மனிதர், கை தட்டி, என் நடிப்பை ரொம்பவும் ரசித்ததையும் கவனித்தேன்.
'அட... நம்மகிட்டேயும் விஷயம் இருக்கு போலிருக்கு... இத்தனை ஜனங்களும் எப்படி கை தட்டி ரசிக்கிறாங்க...' என்ற சந்தோஷம் ஒரு பக்கம், 'நான் சொன்னதை செய்யாம, நீ பாட்டுக்கு அதிகப்பிரசங்கித்தனமா என்னென்னவோ பண்ணிட்டியே...' என்று, இயக்குனர் கோபித்து கொள்வாரோ என்ற பயம், இன்னொரு பக்கம்.
காட்சி முடித்து, விண்ணதிரும் கரகோஷங்களுக்கு இடையே வந்தபோது, 'அட... போனா போகுதுன்னு ஒரு சின்ன கதாபாத்திரம் குடுத்தா, அதுல கூட என்னமா பிச்சு உதறிட்டே...' என்று, என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார், இயக்குனர்.
நாடகம் முடிந்தவுடன், முன் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருந்த சிவந்த மனிதர், மேடைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் தான், நாடகத்துக்கு தலைமை விருந்தினர்.
அவர் யார் தெரியுமா?
செப்., 27, 1933ல், கன்னட பிராமண குடும்பத்தில் பிறந்த, நாகேஸ்வரனின் குடும்பம், ஈரோடு மாவட்டம், தாராபுரத்தில் வசித்தது. நாகேஸ்வரனது அப்பா, மைசூரில், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்; மிகவும் கண்டிப்பானவர். எஸ்.எஸ்.எல்.சி., முடித்த உடன், கோவை, பி.எஸ்.ஜி., ஆர்ட்ஸ் காலேஜில், 'இன்டர்மீடியட்' சேர்ந்தான், நாகேஸ்வரன்.
வீட்டில், செல்ல பெயர், குண்டுராவ். இரண்டாம் ஆண்டு பரீட்சைக்கு சில நாட்களுக்கு முன், அம்மை நோய் தாக்கியது. அது, குணமடையும் தருவாயில், இரண்டாவது தாக்குதல். அடுத்து, மூன்றாம் தடவையும் தாக்கியது. பிழைத்ததே பெரிய விஷயம். பால் வழியும் நாகேஸ்வரனது முகத்தில், அம்மை, தன், 'ஆட்டோகிராப்'பை கிறுக்கி விட்டு போனது. மனம் வெறுத்த நாகேஸ்வரன், வீட்டை விட்டு வெளியேறினான்.
இலக்கில்லா வாழ்க்கை பயணத்தில் பலவிதமான வேலைகள். ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், ஒரு கூலி தொழிலாளியாக கூட வேலை பார்த்திருக்கிறான்.
யதேச்சையாக எழுதிய, ரயில்வே பரீட்சையில் தேர்வாகி, சென்னை, தெற்கு ரயில்வே தலைமையகத்தில், 'கிளார்க்' வேலை கிடைத்தது. அங்கே தான், நாடக ஆசை துளிர் விட்டது. நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தான். அவனது நடிப்பு திறமையால், ரசிகர்களின் கவனத்தை மட்டுமின்றி, திரையுலகினர் கவனத்தையும் ஈர்த்தான். 1959ல், முக்தா சீனிவாசன் இயக்கத்தில், தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம், சினிமாவில் அறிமுகமானான், நாகேஸ்வரன் என்ற நாகேஷ்.
ஹாலிவுட்டின், ஜெர்ரி - லுாயிஸ் பாணியிலான, நாகேஷின் நடிப்பு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நாடகத்துக்கு தலைமை வகித்த அந்த நபர், 'மைக்'கை பிடித்து, 'நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், அபாரமாக நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார், ஒருவர்... தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில், வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரை தான் சொல்கிறேன்...' என்று சொல்லி, தன் பக்கத்தில் அமர்ந்திருந்த, இயக்குனரிடம், 'அவர் பெயர் என்ன...' என்று கேட்டார்.
நாகேஸ்வரன் என்று, இயக்குனர் சொல்ல, 'நாகேஸ்வரன் என்ற பெயருடைய அவருக்கு, நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்...' என்று சொன்னபோது, என்னால் நம்ப முடியவில்லை.
வானில் மிதப்பது போன்ற உணர்வுடன், அவர் கொடுத்த கோப்பையை வாங்கிக் கொண்டேன்.
அன்று, என்னை பாராட்டி, கோப்பையை பரிசளித்த, செக்கச் சிவந்த, முதல் வரிசை சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?
எம்.ஜி.ஆர்., தான்.
அதற்கு முன், நான், எம்.ஜி.ஆரை பார்த்தது இல்லை. எனவே, அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. எம்.ஜி.ஆர்., எனக்கு பரிசு கொடுத்த போது, அதை வாங்க சென்ற நான், என் பக்கத்திலிருந்த இன்னொரு நடிகரிடம், 'இவரு யாரு?' என்று கேட்ட, என் அறியாமையை நினைத்து, பலமுறை சிரித்திருக்கிறேன்.
நடிப்புக்காக பரிசு வாங்கி விட்டேனே தவிர, அதற்கும், எனக்கும் துளியும் சம்பந்தமே கிடையாது. பள்ளி நாடகத்தில் நடித்த அனுபவம் அல்லது சினிமாக்கள் நிறைய பார்த்து, நாமும் அதில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது கூட இல்லை. என் அப்பா, ரொம்ப கண்டிப்பானவர். நான் நன்றாக படிக்கணும்; நல்ல மதிப்பெண் வாங்கணும் என்று எப்போதும் சொல்வார்.
தாராபுரம் அக்ரஹாரத்தில், கடைசி வீடு எங்களுடையது. எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில், ராமகாந்த ராவ் என்று ஒருவர் இருந்தார்; பள்ளி ஆசிரியர். அவருக்கு, கோபால் என்ற பையன். தினமும், பையனை, விடியற்காலை, 4:30 மணிக்கெல்லாம் எழுப்பி விடுவார். அவனும் எழுந்தவுடன், சத்தம் போட்டு படிக்க ஆரம்பித்து விடுவான்.
நிசப்தமான அந்த நேரத்தில், எதிர் வீட்டு, கோபால் படிப்பது, ஊருக்கே கேட்கும். விடியற்காலை எழுந்து, சத்தம் போட்டு ஒரு பையன் படிக்கிறான் என்றால், மற்ற அப்பாக்கள் சும்மா இருப்பரா... என் அப்பாவும், தினமும், 4:30 மணிக்கு எழுப்பி விடுவார். எழுந்திருக்கா விட்டால் அடி தான்!
எதிர் வீட்டு பையன், அக்பர், அசோகர் என்று உரக்க படிப்பது, எனக்கு, படிக்க தொந்தரவாக இருந்தது, ஒரு பக்கம்; 'மனசுக்குள்ளேயே படிக்காதே... உரக்க வாய் விட்டு சத்தம் போட்டு படி... இல்லைன்னா, நீ முழிச்சுகிட்டு இருக்கியா, துாங்கிட்டியான்னு எனக்கு தெரியாது...' என்ற அப்பாவின் தொல்லை, இன்னொரு பக்கம். எனவே, எதிர் வீட்டு சத்தத்தை விட, அதிக குரலில், நானும் படிப்பேன்.
இந்த மாதிரி கூத்து, பல நாள் நடந்திருக்கிறது. நான், கோபால் உட்பட, எங்கள் தெருவில் இருக்கும் ஏழெட்டு பேர், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினோம்.
தேர்வு முடிவு வெளியானது. விடியற்காலையில் எழுந்து, சத்தம் போட்டு படித்து, ஊரை எழுப்பி, எனக்கு திட்டு வாங்கி கொடுத்த எதிர் வீட்டு பையன், கோபாலை தவிர, அனைவரும் தேர்ச்சி பெற்றோம்.
வகுப்பில், ஆசிரியர் பாடம் நடத்துகிறபோது, கூர்ந்து கவனிப்பேன். மனதில் நான் பதிய வைத்துக் கொள்கிற பாடங்களும் சரி, மற்ற விஷயங்களும் சரி, மறக்கவே மறக்காது. ஆசிரியர்கள் எல்லாரும் அவ்வளவு சுவாரசியமாக, மிகுந்த ஈடுபாட்டோடு பாடம் நடத்தினர் என்பது தான், முக்கிய காரணம்.
கோயம்புத்துாரில், பி.எஸ்.ஜி., ஆர்ட்ஸ் காலேஜில், 'இன்டர்மீடியட்' சேர்ந்தேன். கல்லுாரி வாழ்க்கையிலும், கலகலப்புக்கு பஞ்சமில்லை. பார்க்க நன்றாக இருப்பேன் என்பதால், கல்லுாரியில், மாணவர்கள் மத்தியில் நான் கொஞ்சம் பிரபலம்.
இரண்டாவது ஆண்டு இறுதி தேர்வுக்கு முன், 'செலக் ஷன்' தேர்வு நடத்துவர். அந்த தேர்வுக்கான கால அட்டவணையை அறிவித்தனர். தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தேன். தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் வாங்குவது ஒன்றும் கஷ்டமான காரியமில்லை என்ற எண்ணமே, எனக்குள் மேலோங்கி இருந்தது.
தேர்வுக்கு இன்னும் நாலே நாள் தான். அம்மை நோய் கடுமையாக தாக்கியது. ஒருமுறை அல்ல; அடுத்தடுத்து மூன்று முறை தாக்கியதில், முகமெங்கும் தழும்புகள். உடம்பு முழுவதுமே குண்டும் குழியுமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
எனக்கு ஏற்பட்ட துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், குமுறி குமுறி அழுதேன். அம்மை போட்டதில், 'செலக் ஷன்' தேர்வும், அதை தொடர்ந்து நடந்த, இறுதி சுற்று தேர்வும் எழுத முடியாமல் போனது.
உடல் ரீதியாக மட்டுமின்றி, மனோரீதியாகவும் வலுவிழந்தேன். அந்த தருணத்தில், எனக்குள்ளே ஒரு வேகம் வந்தது. வேட்டி, சட்டை மாற்றி, அம்மாவிடம் போனேன்.
'நான் போகிறேன். எங்கே போகிறேன், எதற்காக போகிறேன், எப்போ திரும்பி வருவேன் என்றெல்லாம் கேட்காதீர்கள்... ஏனென்றால், இந்த கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதில் கிடையாது...
'ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். நான் திரும்பி வருவேன். கண்டிப்பாக, நல்லபடியாக திரும்பி வருவேன்...' என்று சொல்லி, அம்மாவை ஆழமாக பார்த்தபடி, சில வினாடிகள் நின்றேன்.
அப்போது, அவர் கன்னடத்தில் சொன்ன வார்த்தைகள், இன்றும் என் காதில் ரீங்காரமிடும்.
'நாகேஸ்வரா... வெளி உலகத்துக்கு போய் விட்டால், பலவிதமான மனிதர்களை நீ சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள், வார்த்தைகளால் உன்னை கேவலப்படுத்தலாம். உனக்கு கோபம் வந்து விட்டது என்றால், அவர்கள் ஜெயித்து விட்டதாக அர்த்தம். ஆனால், எப்பவுமே நீதான் ஜெயிக்கணும் என்பது, என் ஆசை...' என்றார்.
வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று, மாபெரும் ஞானி ஒருவர் சொன்ன ஆலோசனைக்கு ஈடான வார்த்தைகள். சொல்லி முடித்தபோது, அவரது கண்களில் ஈரம் கசிவதை கவனித்தேன்.
வீட்டை விட்டு புறப்பட்டேன். கிளம்பி விட்டேனே ஒழிய, கையில் காலணா கிடையாது; அடுத்த வேளை சோற்றுக்கு என்ன வழி என்பதும் தெரியாது.
— தொடரும்

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies