பொன்னியின் செல்வனும் மணிரத்தினமும்,மற்றும் ஐஸ்வர்யாவும்
30 May,2019
ஒரு சின்ன கேள்வி..
நீங்கள் பொன்னியின் செல்வன் வாசித்துவிட்டீர்களா?
இது பழுவேட்டரையர் எனும் பெயரில் உள்ள ஐடியினால் Twitter ல பல நாட்களிற்கு முன் கேட்கப்பட்ட கேள்வி
கேள்வியை இப்பிடி கேட்கனும் "பொன்னியின் செல்வன் எத்தனை முறை வாசித்திருக்கிறீர்கள்"? என comment உடன் Re Tweet பண்ணி இருந்தேன்
பிந்தைய நாட்களில் மணிரத்னம் பொன்னியின் செல்வனை படமாக்க இருப்பதாகவும் ஐஸ்வர்யா தனுஷ் பொன்னியின் செல்வன வெப்சீரிஸ் ஆக எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன.
பொன்னியின் செல்வன் எடுப்பதில் உள்ள சிக்கலே பொன்னியின் செல்வனின் வாசகர்களின் கற்பனையில் இருக்கும் கதாபாத்திரங்களிற்கு வடிவம் கொடுப்பதற்கான நடிகர்கள் எவரும் இங்கு இல்லை என்பதே..
ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தை யாரைக்கொண்டு நிரப்ப முடியும்
குறும்பும் வாலிபத்திமிரும் மிக்க வந்தியத்தேவனை யார் பிரதியிடமுடியும் .யாரோ ஒருவர் சொல்லி இருந்தார்கள் மீண்டும் பொன்னியின் செல்வன் படிக்கப்போகிறேன் இம்முறையாவது மனம் வந்தியத்தேவனாக மாறாமல் இருக்கவேண்டும் என .
அந்தளவிற்கு வாசகர்மனங்களை ஆக்கிரமித்து நிற்கும் பாத்திரங்கள் இவைகள்.
அழகும் அறிவும் மிக்க குந்தவைக்கு எந்த நடிகை வரமுடியும் ..துடிதுடிப்பும் வீரமும் நிறைந்த பூங்குழலி பாத்திரத்தை செய்வதற்கு யார் தான் உண்டு
அனுஷ்கா வை ஒரு இளவரசி பாத்திரத்திற்கு சரி சொல்லலாம் ஆனால் முன்பின் தெரியாத குந்தல இராச்சியத்தின் இளவரசிக்கு பாந்தமா பொருந்திய அனுஷ்கா வாசகர்களின் கற்பனைகளில் இருக்கும் இளவரசிகளை ஈடுசெய்வது கடினமே
மணிரத்னம் படம் எடுத்தாலும் நேரடியாக எடுக்க மாட்டார் .சத்தியவான் சாவித்ரி சுட்டு ரோஜா, மகாபாரதத்தை சுட்டு தளபதி,இராமயணம் "ராவணன்" போன்று தான் இதையும் உல்டா பண்ணுவார்
ஆனால் பொன்னியின் செல்வன வெப்சீரிஸ் ஆக எடுக்க ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யாவை பிரபலநிறுவனம் அணுகி உள்ளதாகவும் அதுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெறுவதாகவும் கேள்விப்பட்ட போது எனக்கு ஐஸ்வர்யா தனுஸ்
ஐ.நா சபையில் ஆடிய பரதநாட்டியம் தான் என்னையறியாமல் நினைவில் வந்து போனது