சின்னத்திரையில் தனக்கென ரசிகர்களைக் கொண்டவர்தான் VJ சித்ரா
26 May,2019
VJ சித்ரா (VJ Chitra), 2 May 1992 அன்று சென்னையில் பிறந்தவர். அவர் சென்னையிலேயே தனது பள்ளிப் படிப்பை முடித்து, எஸ்ஐடி கல்லூரியில் மாஸ்டர் ஆஃப் சயின்ஸில் பட்டம் பெற்றவர்.
இவர் ( VJ சித்ரா) – ஒரு பன்முகத் திறமையாளர்
சின்னத்திரை நடிகை
சிறந்த உளவியலாளர்
நிகழ்ச்சி தொகுப்பாளர்
விளம்பர மாடல்
சிறந்த நடனக் கலைஞர்
டப்பிங் கலைஞர்.
பல நிகழ்ச்சியில் விருந்தினர்.
VJ சித்ரா (VJ Chitra), ஜெயா டிவி தொடரின் மன்னன் மகள் என்ற தமிழ் தொடரில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து மக்கா தொலைக் காட்சி தொலைக்காட்சியில் பத்து நிமிட கதைகள் நிகழ்ச்சியில் நடித்திருக்கிறார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சீ சீசன் 2 , சன் தொலைக்காட்சியில் சின்ன பாபா பெரிய பாப்பா, ஜீ தமிழ் மொழியில் டார்லிங்க் டார்லிங் போன்ற பிரபல தொடர்களில் VJ சித்ரா (VJ Chitra) நடித்திருக்கிறார். தற்போது இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வேலுநாச்சி மற்றும் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் ஆகிய தொடர்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.