நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து அறிவிப்பு!
26 May,2019
நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் அவருக்கான சரியான பெண்ணை தாங்கள் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனது தாயார் உஷா பார்த்த பெண்ணை சிம்பு திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிம்புவுக்கு பார்த்துள்ள பெண் உஷாவின் உறவுக்கார பெண் என்றும் இவர்கள் இருவருக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் திருமணம் நடக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.