நடிகை அஞ்சலியுடன் நான் நடித்த அனுபவம்
22 May,2019
தமிழ் எம்.ஏ. திரைப்படத்தில் அறிமுகமாகி, ஆயுதம் செய்வோம் திரைப்படத்தின் மூலம் நுழைந்து, அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்தார் நடிகை அஞ்சலி. இவருடன் வளர்ந்து வரும் இளம் நடிகர், சாம் ஜோன்ஸ், ஏமாளி திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானவர். அடுத்து தர்மபிரபு, லிசா 3டி படங்களில் நடித்துள்ளார். லிசாவில் அஞ்சலிக்கு ஜோடியாகவும், தர்மபிரபுவில் ஜனனிக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.
நடிகை அஞ்சலியுடன் நான் நடித்த அனுபவம் –
சாம்ஜோன்ஸ்
பி.காம் பட்டப்படிப்பு லயோலா கல்லூரியில் படித்தேன். அப்போது எனக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. என்னுடைய முதல் படத்திலேயே பல தோற்றங்களில் நடிக்கும் அசாதாரண வாய்ப்பு வந்தது. இப்போது லிசாவில் பிரம்மானந்தத்துக்கு மகனாக நடித்துள்ளேன். பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் இளம் கல்லூரி ஜோடியாக நானும் அஞ்சலியும் வருகிறோம். அவர் எனக்கு நடிப்பில் சீனியர் என்பதால் நிறைய சொல்லிக்கொடுத்தார். நடிப்பதற்கு பயிற்சி கொடுத்தார்.
தெலுங்கிலும் நானே குரல் கொடுத்துள்ளேன். தர்மபிரபுவில் எமலோகத்தில் யோகி பாபுவும் கீழ் உலகத்தில் நானும் கதாநாயகர்களாக இருப்போம். நான் சின்ன பையனாக இருப்பதால் இளம் கதாநாயகன் வாய்ப்புகள் வருகின்றன. அடுத்து 2 படங்கள் பேசி வருகிறேன். விஜய் சேதுபதி போல் அனைத்துவித கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும். சிவகார்த்திகேயன் போல் ரசிகர்களுக்கு நல்ல எண்டர்டெய்னராகவும் விளங்கவேண்டும் என்பதே என் ஆசை’. இவ்வாறு அவர் கூறினார்.