அந்த நடிகர் தான் பிடிக்கும் – மிஸ் இந்தியா எலைட் அபூர்வி சைனி
01 Apr,2019
ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019 என்ற பட்டத்தை வென்ற அபூர்வி சைனி, விஜய் சேதுபதிதான் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.
சென்னையை சேர்ந்த அபூர்வி சைனி மார்ச் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற “ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா” என்கின்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு “ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019″ என்ற பட்டத்தை வென்றார்.
இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், அபூர்வி சைனி பட்டத்தை வென்றார்.
அபூர்வி தற்போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். 21 வயது ஆகும் இவர், தனது 19ஆவது வயதில் மாடலிங் துறையில் கால் பதித்து “ரிலையன்ஸ் ஜுவேல்ஸ் மிஸ் இந்தியா சென்னை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா, பிரெஷ் பேஸ் சோசியல் ஸ்டார் போன்றவற்றில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார்.
இவர் விளம்பர படங்களிலும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்து உள்ளார்.
நடிப்பு, பாடல், நடனம் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இவர் இந்தியா சார்பில், பிலிப்பைன்ஸில் நடத்தப்படும் “பேஸ் ஆப் பியூட்டி” என்ற அழகு போட்டியில் இந்த வருட இறுதியில் கலந்துகொள்கிறார்.
தன்னுடைய நாடு சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும். என்னுடைய பட்டத்தின் மூலம் இந்த நாடு, மக்கள் மற்றும் என் பெற்றோர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பேன் என்றும், தற்போது பெரிய கனவுகளை கண்டு மக்களின் இதயத்தை வெல்ல வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
அவருடைய பெரிய கனவு வெள்ளித்திரையில் கால் பதித்து தனக்கு பிடித்த நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதே ஆகும். மேலும் எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி எனவும் கூறினார்.