நடிகை பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ் விவாகரத்து? பரபரப்பு தகவல்
31 Mar,2019
நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸும் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக, செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழில் விஜய் ஹீரோவாக நடித்த ‘தமிழன்’ படத்தின் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹொலிவூட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்துவருகிறார்.
இவர் அங்கு நடிக்கும்போது, தன்னை விட 10 வயது குறைந்த, அமெரிக்க பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த 3 மாதத்துக்குள் அவர்கள் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக, ஓகே (OK magazine) என்ற ஹொலிவூட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
திருமணத்துக்குப் பின் இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை என்றும் வேலை, பார்ட்டிக்குச் செல்வது, ஒன்றாக நேரம் செலவிடுவது உட்பட பல விவகாரத்தில் இருவருக்கும் பிரச்னை என்றும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அவர்கள் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இந்த விவாகரத்துக் கதையில் உண்மையில்லை, அது வெறும் வதந்திதான் என்றும் பிரியங்காவும் நிக் ஜோனாஸும் குடும்பத்துடன் மியாமியில் விடுமுறையை கழித்து வருவதாகவும் பிரியங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது